ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

உயிர் இருக்கும் வரை சூரியை மன்னிக்க மாட்டேன்.. செம கோபத்தில் விஷ்ணுவிஷால்!

தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்கள் மிகக் குறைவுதான். அந்த வகையில் இவர் படம் என்றால் நன்றாக இருக்கும் என நம்பிக்கையை சில ஆண்டு காலமாக வைத்துக் கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால்.

இவருக்கும் ஒரு கட்டத்தில் மாஸ் ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது அவர் நடிக்கும் படங்களில் தெரிந்தது. ஆனால் அந்த படங்கள் அனைத்துமே அவரது கையை கடிக்க நமக்கு என்ன வரும் என்பதை புரிந்து கொண்டு தற்போது நல்ல நல்ல படங்களாக கொடுத்து வருகிறார்.

அதுவும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது எஃப்ஐஆர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கும் நடிகர் சூரிக்கும் இடையில் ஒரு புகைச்சல் இருக்கிறது என்பது கேள்வி பட்டது தான்.

விஷ்ணு விஷாலும் அவரது அப்பாவும் சேர்ந்து சூரியிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக சூரி ஒரு செய்தியைச் சொல்ல அது காட்டுத் தீயை விட வேகமாக பரவி விஷ்ணு விஷால் குடும்பத்தினருக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தி கொடுத்தது.

ஆனால் விஷ்ணு விஷாலோ சூரியை ஏமாற்றி பிழைக்கும் அளவுக்கு நாங்கள் இல்லை எனவும் அப்பா பெரிய பதவியில் இருந்தவர் எனவும் தன்னுடைய நியாயத்தை வைத்தார். இவர்களுக்கு உள்ளேயே பேசிக் தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயத்தை சூரி வெளியே கொண்டு வந்தது சரி இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.

இந்நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் விஷ்ணு விஷால் சூரி உடன் நடித்த அந்த படம் வெற்றி பெற்றால் கூட அது எனக்கு தேவை இல்லை எனவும், அவர் என்னை மட்டும் இல்லை என்னுடைய தந்தையையும் அசிங்கப்படுத்தி விட்டார் எனவும் தன்னுடைய மனக்குமுறலை வெளிக்கொண்டு வந்துள்ளார். மேலும் தன் உடம்பில் உயிர் உள்ளவரை சூரியை மன்னிக்கவே மாட்டேன் எனவும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Trending News