ஈகோவிற்காக குப்பையில் போடப்பட்ட 25 கோடிகள்.. தயாரிப்பு நிறுவனத்தையே மூடும் விஷ்ணு விஷால்

vishnu-vishal
vishnu-vishal

நன்றாக வளர்ந்து வந்து கொண்டிருந்த விஷ்ணு விஷாலுக்கு இப்பொழுது நேரம் சரியில்லை. வெண்ணிலா கபடி குழு, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி, சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற படங்கள் இவரின் அடையாளம். காமெடி கலந்த கதாபாத்திரம் இவருக்கு செட் ஆகும் அதை வைத்து ஹிட் படங்கள் கொடுத்து வந்தார்.

விஷ்ணு விஷால் படங்களையும் தயாரித்து வந்தார்.VFF என்ற தன்னுடைய நிறுவனத்தின் மூலம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சிலுக்குவார் பட்டி சிங்கம், FIR, கட்டா குஸ்தி போன்ற படங்களையும் தயாரித்து இருந்தார். இப்பொழுது தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை முழுவதுமாக மூடிவிட்டார்.

மோகன்தாஸ், கவரிமான் பரம்பரை போன்ற படங்களை தன்னுடைய நிறுவனத்தின் மூலம் நடித்தும், தயாரித்தும், வந்தார். இது போக அருண் ராஜா காமராஜ இயக்கத்தில் மற்றும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதையும் இவரே தயாரிக்கவும் முன்வந்துள்ளார்.

இவரது தயாரிப்பில் உருவாகி முடிந்துள்ள மோகன்தாஸ் திரைப்படத்தை இயக்கியவர் முரளி கார்த்திக். இந்த படத்தில் அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடித்தார். இடையில் இயக்குனருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் பிரச்சனை வந்தது. இதன் காரணமாக 15 கோடிகளில் எடுக்கப்பட்ட அந்த படத்தை குப்பையில் போட்டுவிட்டார்.

விஷ்ணு விஷால் நடித்து தயாரித்த மற்றொரு படம் கவரிமான் பரம்பரை. அந்தப்படத்தையும் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கினார். இருந்தும் அதையும் இப்பொழுது கதம் பண்ணிவிட்டார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தையும் மூடி ஏற்கனவே கமிட்டாகி இருந்த அருண் ராஜாவை தயாரிப்பாளர் ஐசரி கணேசிடம் அனுப்பிவிட்டாராம்.

Advertisement Amazon Prime Banner