திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் சேதுபதியை ஓரங்ட்டி ஜெயித்த விஷ்ணு விஷால்.. குஸ்தி முதல் நாள் வசூலை பார்த்து வாயைப் பிளந்த டிஎஸ்பி

விஷ்ணு விஷால் நடிப்பில் நேற்று கட்டா குஸ்தி திரைப்படம் வெளியானது. ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. முழுக்க முழுக்க காமெடி அலப்பறையாக இருக்கும் இந்த திரைப்படம் முதல் நாளிலேயே கோடி கணக்கில் வசூலித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு விஷ்ணு விஷால் இப்படி ஒரு திரைப்படத்தின் மூலம் அசத்தல் கம் பேக் கொடுத்துள்ளார். அவரையே தாண்டும் அளவுக்கு ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பும் தற்போது பாராட்டப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலியாக ரசிகர்களை கவர்ந்த அவர் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ஆடியன்சையும் மெர்சலாக்கி இருக்கிறார்.

Also read: கைவிட்ட நடிகர்கள், பணம் இல்லாமல் இறந்து போன வெண்ணிலா கபடி குழு நடிகர்.. பப்ளிசிட்டிக்காக இரங்கல் தெரிவித்த கேவலம்

அதனாலேயே இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு கூட்டம் தியேட்டர்களில் அலைமோதுகிறது. மேலும் திரும்பத் திரும்ப பார்க்க தூண்டும் வகையில் இப்படம் இருப்பதால் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் முதல் நாளிலேயே நான்கு கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

முதல் காட்சியின் போது சற்று மந்தமாக இருந்த கலெக்சன் அதன் பிறகு தான் வேகம் எடுத்திருக்கிறது. அதிலும் தமிழ்நாட்டில் இப்படம் 1.6 கோடி வசூலித்து இருக்கிறது. அதை தொடர்ந்து தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் தெலுங்கானாவிலும் இப்படம் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

Also read: கட்டா குஸ்தி படத்தை தூக்கி நிறுத்திய பொன்னியின் செல்வன் பூங்குழலி.. விஷ்ணு விஷாலையே ஓரம் கட்டிய பிரபலங்கள்

அதைத்தொடர்ந்து இரண்டாவது நாளான இன்றும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வார இறுதி நாள் என்பதால் இன்றும், நாளையும் இந்த கலெக்சன் இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் இப்படத்திற்கான ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இப்படம் நேற்று விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான டிஎஸ்பி திரைப்படத்தையே முந்தியுள்ளது. சமீப காலமாக தோல்வி படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதிக்கு நேற்று வெளியான இந்த திரைப்படமும் தோல்வி படமாக அமைந்திருக்கிறது. அதை வைத்து பார்க்கும் போது விஷ்ணு விஷால் இந்த ரேஸில் முன்னணியில் இருக்கிறார்.

Also read: விஷ்ணு விஷாலை ஓரங்கட்டிய பூங்குழலி, சிரிப்பலையில் அதிரும் தியேட்டர்கள்.. கட்டா குஸ்தி முழு விமர்சனம்

Trending News