தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் அனைத்து மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடி சாதனை படைத்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். அற்புதமான குரல் வளத்துடன் இவர் பாடிய எண்ணற்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. இவர் மறைந்தாலும் இவருடைய பாடல்கள் என்றும் நிலைத்து நிற்கும்.
அதேபோன்றுதான் நடிகர் விவேக்கின் நகைச்சுவை திறமையும் ரசிகர்கள் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம் அகலாது. அவர் ஒரு காமெடியனாக வரவேண்டுமென்று சினிமாவுக்குள் வரவில்லை. ஆனால் விதி அவரை இந்தப் பாதையில் பயணிக்க வைத்து எட்டாத உயரத்தை அடைய வைத்தது.
தன்னுடைய நகைச்சுவையில் காமெடி மட்டுமல்லாமல் பல சமூகக் கருத்துக்களையும் சொல்லும் ஒரே நடிகர் விவேக் மட்டும்தான். இவரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத ஒன்று. இந்த இருபெரும் ஜாம்பவான்களும் அறிமுகமானது ஒரே திரைப்படத்தில் தான்.
ஒரு பாடகராக எஸ்பிபி பல திரைப்படங்களில் பணிபுரிந்து இருந்தாலும் ஒரு நடிகராக அவர் அறிமுகமானது மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் தான். கே பாலச்சந்தர் இயக்கிய இந்த திரைப்படத்தில் சுஹாசினி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் நடித்திருப்பார்.
இதில் அவருடைய தம்பியாக நடிகர் விவேக் அறிமுகமாகி இருந்தார். இதுபோன்று எஸ்பிபி டாக்டராக இப்படத்தில் நடித்து இருப்பார். இப்படி ஒரு படத்தில் அறிமுகமான இவர்கள் வெவ்வேறு பாதைகளில் பயணிக்க ஆரம்பித்தார்கள். இந்த படத்திற்கு பிறகு விவேக் காமெடி டிராக்கில் பயணிக்க ஆரம்பித்தார்.
எஸ்பிபி ஒரு குணச்சித்திர நடிகராக பல திரைப்படங்களில் ஹீரோவிற்கு அப்பா கேரக்டரில் நடித்து அசத்தி இருக்கிறார். அதோடு பாடல்களிலும் தன் கவனத்தை செலுத்தி நம்மை கவர்ந்தார். இப்படி வெவ்வேறு வழிகளில் பயணித்த இவர்கள் இருவரும் தங்கள் வழிகளில் தனி முத்திரை படைத்து இவ்வுலகை விட்டு பிரிந்தார்கள்.