Actor Brahmanandam: தமிழ் சினிமாவிற்கு ஒரு காலகட்டத்தின் போது காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டபோது அக்கட தேசத்திலிருந்து வந்த பிரம்மானந்தம் கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தினார். அப்படி அவர் விவேக், வடிவேலுவின் இடத்தை நிரப்பி, தமிழில் நடித்த 5 சிறந்த படங்களை பற்றி பார்ப்போம்.
மொழி: 2007ம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் பிரித்விராஜ், ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் மொழி. தரமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பேச்சிலராக இருக்கக்கூடிய பிரித்விராஜ் மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரின் அப்பார்ட்மெண்ட் செக்ரட்டரியாக காமெடி நடிகர் பிரம்மானந்தம் நடித்தார். அதிலும் பிரகாஷ்ராஜ் ஆடையே இல்லாத போது அவரை பிரம்மானந்தம் அவரைப் பார்த்துவிட, அதன் பிறகு இவர்களுக்கு இடையே நடக்கும் காமெடி காட்சிகள் படத்தை பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்த படத்தின் மூலம் தான் தெலுங்கு நடிகரான பிரம்மானந்தம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார்.
சரோஜா: வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் 2008 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற கலகலப்பான படம் தான் சரோஜா. இந்த படம் ஆங்கிலத்தில் தழுவி எடுக்கப்பட்டாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இந்தப் படத்தில் டிராபிக்கில் மாட்டிக்கொண்ட காருக்குள் இருக்கும் பிரம்மானந்தம் தன்னுடைய காரை இடித்து விட்டார்கள் என தெரிந்ததும் வைபோ, பிரேம்ஜி கூட்டாளிகளை சரமாரியாக திட்டி தீர்ப்பார். அத்துடன் அவர்கள் தன்னுடைய மனைவியை கொத்திட்டு போயிருவார்களோ என்ற பயத்தில் ஆக்சன் கலந்த காமெடியை வெளிக்காட்டி படத்தைப் பார்ப்பவரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
பயணம்: இந்திய விமானம் கடத்தப்பட்ட உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் நாகர்ஜுனா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோருடன் பிரம்மானந்தம் காமெடி நடிகராக நடித்தார். இதில் இவர் இயக்குனர் ராஜேஷ் கபூர் கெட்டப்பில் தன்னுடைய நகைச்சுவை உணர்வை காட்டினார். இந்த படத்தில் தீவிரவாதி ஒருவரை வைத்து இவர் ஏற்கனவே ஒரு படத்தை இயக்கியிருப்பார்.
Also Read: நடிப்பை நிறுத்திய வடிவேலுக்கு நிகரான நடிகர்.. கமல் படத்தோடு எண்டு கார்டு போடும் காமெடியன்
அந்த படத்தில் நடித்த நடிகரை மறுபடியும் நிஜமாகவே தீவிரவாதி போல் வேஷம் போட வைத்து பிரம்மானந்தத்தையும் உடன் வைத்திருப்பார்கள். என்னதான் இயக்குனராக பிரம்மானந்தம் எடுத்த அந்தப் படம் மொக்க படமாக இருந்தாலும் நிஜமாகவே தீவிரவாதிகளை பிடிப்பதற்காக போலீஸ் போடும் திட்டத்துடன் இவர் நடித்த காமெடி காட்சிகள், சீரியஸான காட்சிகளின் மத்தியிலும் தனித்துவமாக தெரிந்தது.
வாலு: சிம்பு, ஹன்சிகா நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்திலும் பிரம்மானந்தம் நகைச்சுவை நடிகராக தோன்றினார். இதில் எம்.டி-யாக இருக்கும் பிரம்மானந்தம் தன்னுடன் இருக்கும் பணியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதமும், அவர்களுடன் செய்யும் காமெடி காட்சிகளும் அந்த சமயத்தில் தமிழ் நகைச்சுவை நடிகர்களான வடிவேலு மற்றும் விவேக் இருவரும் இல்லாத குறையை தீர்த்து வைத்தது.
Also Read: அந்தந்த மாநிலங்களில் காமெடியில் கலக்கிய 5 நடிகர்கள்..தமிழிலும் பட்டையை கிளப்பிய தெலுங்கு காமெடியன்
மரகத நாணயம்: ஆதி, நிக்கி கல்யாணி நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்தப் படத்தில் இரும்பொறை அரசனுடைய ஆவி கிளைமாக்ஸ் காட்சியில் வண்டியை ஓட்டிக்கொண்டு வரும்போது, வழியில் மரகத நாணயத்தை கைப்பற்ற நினைத்த கூட்டத்தில் இரண்டு பேர் அந்த வண்டியில் தொற்றிக் கொள்கின்றனர்.
கடைசியில் அந்த வண்டி டிரைவரே இல்லாமல் ஓடுவது தெரியாமல் வண்டி நின்ற பிறகு அந்த வழியாக சென்ற பிரம்மானந்தம் தான் இந்த வண்டி ஓட்டியதாக நினைத்துக் கொண்டு அவரை பிடித்து மறுபடியும் வண்டியை எடுக்க சொல்கிறார்கள். ஆனால் அவர் அந்த இரண்டு பேரையும் கையில் வைத்திருக்கும் குச்சியால் அடித்து, ‘நான் ஒரு வானூர்தி ஓட்டுநர் என்னை போய் இந்த தகர டப்பா வண்டியை ஓட்ட சொல்கிறாயா!’ என்று அவர்களுடன் சில நிமிடம் செய்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.