வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விவேக் நடித்த கடைசி படம்.. இறப்பதற்கு முன் நிறைவேறிய ஆசை!

சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விவேக் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு காமெடியனாக இருந்தாலும் தான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு சமூக கருத்தை சொல்வது தான் இவருடைய சிறப்பம்சம். அது மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் கூட இவர் பல நல்ல விஷயங்களை செய்து வந்தார்.

அந்த வகையில் அப்துல் கலாமின் வழிகளை பின்பற்றிய இவர் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பலருக்கும் முன்னோடியாக இருந்தார். ஆனால் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற இவருடைய ஆசை நிறைவேறாமலேயே போனது. கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் தான் விவேக் மரணமடைந்தார். இது இன்று வரை திரையுலகில் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பாகவே இருக்கிறது.

Also read: அஜித் மாதிரி நடிகர்களுடன் நடிக்கும் போது மூளைய கழட்டி வச்சிடுவேன்.. பரபரப்பை கிளப்பிய வில்லன்

இப்படி பலரையும் துயரத்தில் ஆழ்த்தி சென்ற விவேக் தன் முதல் படத்திலேயே இறப்பது போன்ற ஒரு காட்சியில் நடித்திருந்தார். அதாவது சுஹாசினியின் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் தான் விவேக் அறிமுகமானார். அப்பிடத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொள்வது போன்று நடித்திருப்பார்.

அதைத்தொடர்ந்து இவர் அனைத்து ஹீரோக்களுடனும் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் கமல்ஹாசன் உடன் மட்டும் இணையும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே இல்லை. இது அவருக்கு மிகப்பெரிய குறையாகவும் இருந்தது. அந்தக் குறை இந்தியன் 2 திரைப்படத்தின் மூலம் சரிசெய்யப்பட்டது.

Also read: விவேக் இறந்த பின் வாய்ப்பை இழந்த செல்முருகன்.. கேவி ஆனந்த் மறைவுக்குப் பிறகு காணாமல் போன நடிகர்

தற்போது சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடிக்கும் இப்படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தான் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் படம் முடிவதற்கு முன்பே அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். இருப்பினும் அவருடைய ஆசை நிறைவேறி விட்டது.

ஆனால் அதுவே அவருக்கு கடைசி படமாக அமைந்துவிட்டது தான் பரிதாபம். அந்த வகையில் விவேக்கிற்கு கடைசி படமாக அமைந்த இந்தியன் 2 திரைப்படம் அடுத்த வருடம் வெளிவர இருக்கிறது. இதற்கு முன்பாக சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியுடன் இணைந்து அவர் நடித்த தி லெஜெண்ட் திரைப்படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Also read: சமீபத்தில் மாரடைப்பால் இறந்து போன 5 காமெடி நடிகர்கள்.. திரை உலகையே உலுக்கிய விவேக், மயில்சாமியின் மரணம்

Trending News