டிரம்புக்கு ஓட்டு சேகரிக்கும் இந்தியர்.. அமெரிக்காவை திரும்பி பார்க்க வைத்த விவேக் ராமசாமி யார்?

Vivek Ramaswamy: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு இந்த தேர்தலை பெரிய அளவில் பரபரப்பாக இருக்கிறது. அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் விவேக் ராமசாமி என்பவர் பெரிய அளவில் கவனத்தை எடுத்து இருக்கிறார்.

பெயரை கேட்டதுமே இவர் இந்திய வம்சாவளி என்பது நமக்கு தெரிந்திருக்கும் அமெரிக்காவின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களியுங்கள் என விவேக் ராமசாமி பேசியிருக்கிறார்.

இரண்டு நாளுக்கு முன்னால் பிரச்சாரக் கூட்டத்தில் இவர் பேசியது உலக அளவில் ட்ரெண்டாகி இருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா அதிபராக்காமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பேசி இருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

விவேக் ராமசாமி யார்?

விவேக் ராமசாமி அப்பா அம்மா இருவருமே கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பேசும் மலையாளிகள். விவேக் பிறந்ததிலிருந்து படிப்பு, வேலை எல்லாமே அமெரிக்காவில் தான். ஒரு மருந்து நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

அதன் பின்னர் ஒரு சில புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். 2023 ஆம் ஆண்டு தன்னை அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிலை நிறுத்தினார். இவருடைய ஒரு சில கோட்பாடுகள் அமெரிக்க மக்களுக்கு சாதகமாக இல்லை.

இதனால் இவருக்கு பின்னடைவு ஏற்படுத்துவதை உணர்ந்து, அதிபர் தேர்தலில் நிற்பதிலிருந்து விலகிக் கொண்டார். அதன் பின்னர் இப்போது ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சார கூட்டத்தில் பேசி வருகிறார். விவேக் ராமசாமி பிரச்சார கூட்டத்தில் பேசிய வீடியோவை பகிர்ந்து பாராட்டி இருக்கிறார் டெஸ்லாவின் சிஇஓ எலன் மாஸ்க்.

Next Story

- Advertisement -