Vivek and Vadivelu: எத்தனையோ காமெடி நடிகர்கள் நம்மளுடைய மனதில் ஆழமாக பதிந்திருந்தாலும், தற்போது வரை விவேக் மற்றும் வடிவேலுவின் காமெடிக்கு இணையாக யாரும் இல்லை. முக்கியமாக வடிவேலுவின் காமெடி மற்றவர்களை சிரிக்க வைக்கவும், கவலைகளை மறக்கடிக்க வகையிலும் இருக்கும். அதே மாதிரி விவேக்கின் காமெடி சமூக அக்கறையில் நல்ல கருத்துக்களை காமெடி மூலமாக சொல்லி மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று வித்தியாசமாக முயற்சியை எடுக்க கூடியவர்.
அப்படிப்பட்ட இவர்கள் பக்கத்தில் இருந்து சின்ன நடிகர்களும் பெயர் சொல்லும் அளவிற்கு பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அப்படி விவேக் காமெடியில் அதிகமான காட்சியில் வந்தவர்கள் தான் போண்டாமணி, முத்துக்காளை, கிங் காங், கிரேன் மனோகர் மற்றும் scissor மனோகர். பொதுவாக விவேக் பொருத்தவரை தான் மட்டும் வளர்வதோடு தன்னை சுற்றி இருப்பவர்களும் வளர வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.
அதனால் தான் வாய்ப்புக்காக யாரும் காத்திருக்கக் கூடாது என்று சொல்லி சில சின்ன ஆர்டிஸ்ட்களுக்கு கை கொடுத்து அவருடன் பல படங்களில் கூட்டிட்டு வந்திருக்கிறார். இப்படி வந்தவர்கள் தான் இவர்கள் அனைவரும். அதன் பின் இவர்களுக்கு வடிவேலுவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் வடிவேலுடன் இணைந்து நடித்த முத்துக்காளை காமெடி அதிக அளவில் பிரபலமானது. செத்து செத்து விளையாடுவோமா மற்றும் கார்மேகம் படத்தில் அம்மே அம்மே என்று சொல்லும் டயலாக்கும் பேமஸ் ஆனது.
Also read: இந்த விஷயத்தில் அஜித்தும், விவேக்கும் ஒரே மாதிரிதான்.. ஊரே சிரிப்பா சிரிச்ச சம்பவம்
அடுத்தபடியாக போண்டா மணி, சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் வடிவேலு இவரை மாப்பிள்ளை கோலத்தில் அலங்கோலமாக அழகு படுத்தி இருப்பார். அத்துடன் வடிவேலுவை மாட்டிவிடும் விதமாக போலீஸ் அடிச்சு கூட கேட்பாங்க எதையும் சொல்லி விடாதே என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவார். இதனை தொடர்ந்து இங்கிலீஷ்காரன் மற்றும் ஏபிசிடி படங்களில் வடிவேலுடன் இணைந்து பிரபலமாகி இருப்பார்.
அதே மாதிரி நடிகர் கிங்காங், முக்கால்வாசி வடிவேலு உடன் பல காட்சிகளில் நடித்து இருக்கிறார். அத்துடன் கிரேன் மனோகர் மற்றும் scissor மனோகர் இவர்களும் வடிவேலுவுடன் நடித்து அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார்கள். இப்படி இவர்கள் அனைவரும் வடிவேலுவுடன் இணைந்து பிரபலமானதால் இதை அறிந்த விவேக், இவர்களுடைய காம்பினேஷன் தான் நன்றாக இருக்கிறது என்று உணர்ந்து கொண்டு அவர்களிடமிருந்து விலகி இருக்கிறார்.
அதற்கு காரணம் என்னவென்றால் மறுபடியும் அந்த சின்ன நடிகர்களுடன் விவேக் நடிக்க ஆரம்பித்து விட்டால் வடிவேலு, அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை கொடுக்க மறுத்து விடுவார். அத்துடன் அந்த நடிகர்களை திரும்பி கூட பார்க்க மாட்டார் என்பதற்காக விவேக் தந்திரமாக அந்த சின்ன நடிகர்களை ஒதுக்கி வந்திருக்கிறார். இதற்கெல்லாம் வடிவேலுவின் சூழ்ச்சி தான் காரணம் என்பதை உணர்ந்து விவேக் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
Also read: அரசியலில் வடிவேலுவை மிஞ்சும் சூரி.. உதயநிதியின் கூட்டணியை வெளிச்சம் போட்டு காட்டிய ப்ளூ சட்டை