VJ Siddhu: விஜே சித்துவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கும் இவருடைய வீடியோக்களும் வெக பிரபலம்.
அவ்வப்போது சில பல சர்ச்சைகளை சந்தித்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதேபோல் மொட்டை மாடி பார்ட்டி என்ற பெயரில் வெளியாகும் பிரபலங்களின் பேட்டியும் ஹிட் தான்.
அப்படி பிரபலமான இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டிராகன் படத்தில் நடித்திருந்தார். அவருக்கு இப்படம் ஒரு நல்ல அடையாளமாக இருந்தது.
ஹீரோவாகும் VJ சித்து
அது மட்டும் இன்றி தற்போது அவர் ஹீரோவாகவும் மாறி இருக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் தான் இவர் நாயகனாகியுள்ளார்.
அப்படத்தை சித்துவே இயக்குவது தான் ஹைலைட். அவரிடம் கதை இருப்பதை கேள்விப்பட்டார் ஐசரி கணேஷ் நீங்களே இயக்கி நடிங்க என கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.
அதன்படி தற்போது அப்படத்தின் ப்ரோமோ சூட் கூட எடுக்கப்பட்டுவிட்டது. அதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சித்து உடன் இணைந்து நடித்துள்ளார்.
விரைவில் அந்த வீடியோவை வெளியிட்டு பட அறிவிப்பை அறிவிக்க உள்ளனர். இப்படியாக டிராகன் படம் சித்துவுக்கு ஜாக்பாட்டை கொடுத்துள்ளது.