சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

TTF வாசனை தொடர்ந்து VJ சித்து மேல் பாய்ந்த வழக்கு. . இது என்னடா ஸ்ட்ரெஸ் பஸ்டருக்கு வந்த சோதனை

VJ Siddhu vlogs: பிரபல யூட்யூபர்களுக்கு இது போராத காலம் போல. பட்ட காலிலேயே படும் கெட்ட கூடி கெடும் என்பது போல் அடுத்தடுத்து நிறைய யூடியூபர்கள் போலீஸ் புகாரில் சிக்கி வருகிறார்கள். உணவகங்களுக்கு சென்று ரிவ்யூ கொடுத்து வந்த இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே அறிந்து அதை வீடியோவாக போட்டார்.

அவர் என்னவோ வியூஸ் அதிகமாகி லட்சக்கணக்கில் சம்பாதித்து விடலாம், அத்தோடு தன்னுடைய மகிழ்ச்சியையும் ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தார். ஆனால் அவரை தமிழ்நாடு சுகாதாரத்துறை வச்சு செய்து விட்டது.

அதைத் தொடர்ந்து பைக் ஸ்டண்ட் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் மதுரையில் போன் பேசிக்கொண்டே கார் ஓட்டியதால் கைது செய்யப்பட்டார். டிடிஎஃப் வாசன் கதை ஊர் அறிந்த விஷயம் தான். பைக் லைசென்ஸ் தடை செய்யப்பட்டதோடு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கடும் கோபத்திற்கு ஆளானவர்.

ஆனால் தற்போது இவருடைய கைது பிரபல யூடியூபர் சித்துவிற்கு கேடாக அமைந்திருக்கிறது. சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சித்துவின் வீடியோ ஒன்றை சுட்டிக்காட்டி அதில் சித்து கார் ஓட்டிக்கொண்டே போன் பேசுகிறார் என சொல்லி ஒரு கேஸ் ஒன்றை போட்டு இருக்கிறார்.

அத்தோடு மட்டுமல்லாமல் சித்துவின் வீடியோக்களில் ஆபாச வசனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருப்பதாகவும் இந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய காலகட்ட இளைஞர்களின் நாடித்துடிப்பாக இருக்கும் சேனல் தான் சித்து வ்லாக்ஸ்.

ஸ்ட்ரெஸ் பஸ்டருக்கு வந்த சோதனை

இந்த சேனலில் ஒரு வீடியோ போட்டால் ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டி விடும். ஒரு நாலு நண்பர்கள் கூடினால், ஏதாவது ஒரு இடத்திற்கு பயணம் மேற்கொண்டால் எப்படி இருக்கும் என்பதை இந்த வீடியோ கண் முன் காட்டிவிடும்.

பெண்களுக்கு புரிவதை விட, இந்த வீடியோ ஆண்களுக்கு மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது. அதனால் தான் சித்து இந்த அளவுக்கு கொண்டாடப்படுகிறார். இப்போதைய இளைஞர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆக இந்த சேனல் இருக்கிறது.

இருந்தாலும் சாலை போக்குவரத்து விதிகளை மதிக்கவில்லை என ஒரு கேஸ் போட்டு சித்துவை லாக் செய்து வைத்திருக்கிறார்கள். இப்போது சித்து மீது வழக்கு தொடரவில்லை என்றால், அப்போ ஏன் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்தார்கள் என்ற கேள்வி வரும். இந்த சிக்கலில் இருந்து சித்து எப்படி மீண்டு வரப் போகிறார் என்பதுதான் இப்போது தெரியவில்லை.

சிக்கலை சந்தித்து வரும் யூடியூபர்கள்

Trending News