ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

திரைக்குப் பின்னால் விஜய், சிவகார்த்திகேயனின் நெருக்கம்.. வெங்கட் பிரபு செய்த தில்லாலங்கடி வேலை

சிவகார்த்திகேயன் சினிமாவில் இன்று எந்த ஒரு பெரிய பின்புலமும் இல்லாமல் ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறார். விஜய், அஜித்க்கு அடுத்தபடியாக பெரும் ரசிகர் பட்டாளம் வைத்திருக்கிறார். மற்ற ஹீரோக்கள் மாதிரி இல்லாமல் ஏழ்மை நிலையில் இருந்து வளர்ந்தவர் சிவகார்த்திகேயன்.

ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு, சிவகார்த்திகேயன் மீது ஒரு பெரிய பிரியம் உண்டாம். இந்த பையனிடம் நிறைய திறமைகள் இருக்கிறது, டெடிகேஷன் மற்றும் உண்மை இருக்கிறது, கலகலப்பான பையன் என்று தனக்கு நெருங்கிய வட்டாரங்களிடம் கூறிக் கொண்டே இருப்பாராம்.

சிவகார்த்திகேயன் தான் நடித்த படங்கள் கடன் பிரச்சினையில் தவிக்கும் பொழுது தானே இறங்கி வந்து கடனுக்காக கையெழுத்து போடக்கூடியவர். எவ்வளவு லாபம் நஷ்டம் வந்தாலும் சினிமாவில் தான் சம்பாதித்தேன் என்று அனைத்தையும் சினிமாவிற்காகவே கொடுத்தவர்.

சிவகார்த்திகேயனின் இந்த பண்புதான் விஜய் மனதில் அவருக்கு ஒரு பெரிய இடத்தை கொடுத்தது. விஜய் தன்னுடைய மேனேஜரிடம் கூட அவருக்கு ஏதாவது நிதி உதவி வேண்டுமானால் உதவுமாறு கூறியுள்ளாராம். எல்லாவற்றிற்கும் மேலாக கோட் படத்தில் சிவகார்த்திகேயனுக்காகவே விஜய் ஒரு வசனத்தை சேர்த்துள்ளாராம்.

வெங்கட் பிரபு செய்த தில்லாலங்கடி வேலை

கோட் படத்தில் உங்கள் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விஜய்யிடம் சிவகார்த்திகேயன் கூறுகிறார், அது லட்சக்கணக்கான ரசிகர்களை உங்கள் இடத்திலிருந்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்பதன் அர்த்தம் தான். விஜய் ஒன்றும் குழந்தை இல்லை சிவகார்த்திகேயனுக்காகவே வேண்டும் என்று இந்த வசனத்தை ரெடி பண்ணி இருக்கிறார். வெங்கட் பிரபு அடுத்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து தான் இயக்குகிறார். இதற்கு கூட ஒரு பிரமோஷன் லீட் ஆக அமைந்துள்ளது.

Trending News