தமிழ் சினிமாவின் சிகரம் தொட்ட இயக்குனர்களில் பாரதிராஜாவுக்கு முதல் இடம் உண்டு. பாரதிராஜாவுக்கு ’16 வயதினிலே’ படத்திலிருந்து சினிமாவின் வெற்றி தொடர ஆரம்பித்துவிட்டது. 2017 வரை ஆறு நேஷனல் பிலிம் அவார்டுகள், நான்கு பிலிம்பேர் அவார்ட், இரண்டு தமிழ்நாடு ஸ்டேட் அவார்டுகள் என்று விருதுகளைக் குவித்து வைத்துள்ளார்.
பாரதிராஜா 2004 பத்மஸ்ரீ விருதையும் பெற்ற உள்ளார், ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் மேல் உள்ள அதீத மோகத்தினால், பலதரப்பட்ட கதை அம்சங்களுடன் இன்று வெளிவரும் இளம் இயக்குனர்களுக்கு எடுத்துக்காட்டாக வலம் வந்து கொண்டிருக்கும் பாரதிராஜா. அவரின் திரில்லர் கலந்த படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
சிகப்பு ரோஜாக்கள்:
பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் கமலஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள். இந்த படம் ரசிகர் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றி 175 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. பல விருதுகளை தட்டிச் சென்றது மட்டுமல்லாமல் ஹிந்தியில் ரெட் ரோஸ் என்று ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிக் டிக் டிக்:
பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவி, ஸ்வப்னா, ராதா போன்ற பிரபலங்கள் நடிப்பில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த டிக் டிக் டிக். கிரைம் மற்றும் திரில்லர் கலந்த இந்தப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் கமலஹாசனுக்கு இந்த படம் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
ஒரு கைதியின் டைரி:
கமலஹாசன், ராதா, ரேவதி, ஜனகராஜ் போன்ற பிரபலங்கள் நடிப்பில், இசைஞானி இளையராஜாவின் இசையில் 1985இல் வெளிவந்த படம் ஒரு கைதியின் டைரி. சில்வர் ஜூப்ளி படமாக, 175 நாட்களை தாண்டி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. சிறையில் இருந்து தப்பித்து சென்ற கைதியை வாழ்க்கையை மையமாக வைத்து கதை நகரும். பாக்கியராஜ் இந்த படத்திற்கு கதை உருவாக்கி இருப்பார். இன்றளவும் ரசிகர் மத்தியில் ரிப்பீட் மோடில் பார்க்கத் தூண்டும் படமாக ஒரு கைதியின் டைரி உள்ளது அதுவே முழுமையான வெற்றி என்றே கூறலாம்.
கண்களால் கைது செய்:
பாரதிராஜாவின் இயக்கத்தில் வசீகரன், பிரியாமணி போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பவர். எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும் திரில்லர் கலந்த இந்த படத்தின் சுவாரசியம் இறுதிக் கட்டம் வரை மிக அற்புதமாக இயக்கியிருப்பார் பாரதிராஜா. தலைமுறைகள் மாறினாலும் பாரதிராஜாவை இந்த தலைமுறையின் இயக்குனருடன் ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறார்.
பொம்மலாட்டம்:
அர்ஜுன், நானா படேகர், காஜல்அகர்வால், மணிவண்ணன், ரஞ்சிதா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2008 ல் வெளியானது பொம்மலாட்டம். 14 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையில் 24 கோடி வரை வசூல் செய்தது. இந்தப்படம் ரசிகர் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது ஒரு இயக்குனரின் முழு வாழ்க்கையை படமாகப் கண் முன் நிருதிருப்பார் பாரதிராஜா. இந்த படத்தில் நானா படேகர் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.