செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ராஜமௌலி, ரிஷப் ஷெட்டி பார்த்து கத்துக்கோங்க.. விக்ரம், சுகாசினியை வறுத்தெடுக்கும் திரையுலகம்

சில வருடங்காளாக நம் தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி ரிலீசாகும் பான் இந்தியா படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே மவுசு அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட படம் தான் ராஜமௌலியின் பாகுபலி படங்கள். இப்படத்தை தொடர்ந்து கன்னட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் படங்களும் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

மேலும் கடந்தாண்டு வெறும் 16 கோடி பட்ஜெட்டில் உருவான கன்னட படமான காந்தாரா படம் ஆஸ்கார் தேர்வு வரை சென்று இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த படத்தை கன்னட இயக்குனர் ரிஷப் ஷெட்டி கதை எழுதி, இயக்கி, நடித்தார். இதே போல ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு உலகளவில் புகழ் பெற்ற குளோபல் கோல்டன் விருது வழங்கப்பட்டது.

Also Read: கதை மட்டும் தான் ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்த ஒரே படம்..2 இடத்தில் ஆஸ்கார் வெல்லப் போவது உறுதி

இப்படி தெலுங்கு, கன்னட இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் பேன் இந்தியா படங்களை உலகம் முழுதும் வெற்றியடைய செய்தாலும், இது முழுக்க முழுக்க எங்கள் மொழி படம் என கார்வமாக மார்பில் அடித்து கூறுகின்றனர். ஆனால் நம் தமிழ் சினிமாவின் நடிக்கும் சில நடிகர்கள், நம் தமிழில் எடுக்கப்படும் படங்களை வேறு மொழியுடன் ஒப்பிட்டு அண்மைக்காலமாக பேசி வருகின்றனர்.

உதாரணமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுகாசினி தெலுங்கு மாநிலத்தில் சென்று பொன்னியின் செல்வன் முழுக்க முழுக்க உங்கள் மொழி படம் என விட்டுக்கொடுத்து பேசினார். இவரது பேச்சு சர்ச்சைக் குறையும் முன்பே, இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த நடிகர் விக்ரம், ஹிந்தியில் சென்று இது உங்கள் படம் என விட்டுக்கொடுத்து பேசினார்.

Also Read: படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடும் பொன்னியின் செல்வன் நடிகர்.. மார்க்கெட் குறையவே எடுத்த அவதாரம்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயற்றப்பட்ட இந்த படம் முழுக்க முழுக்க நம் சோழ மன்னர்களின் கதையாகும். இதை எப்படி தெலுங்கு, ஹிந்தி மொழி மக்களுக்கு விட்டுக் கொடுப்பீர்கள் என பல கேள்விகள் நடிகர் விக்ரம், நடிகை சுகாசினி மீது முன்வைக்கப்படுகின்றன.படத்தின் ப்ரோமோஷனுக்காக தமிழ் படங்களை வேறு மொழியினருக்கு கூறுப்போட்டு வருவது தவறு என்றும் விமர்சனம் எழுந்தது.

இவர்களுக்கு மத்தியில் ராஜமௌலி மற்றும் ரிஷப் ஷெட்டி தங்கள் மொழியை விட்டுக் கொடுக்காமல் பேசி வருவது பாடம் புகுத்தும் வகையில் அமைந்துள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் 2, வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இந்த முறை ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலாவது இப்படம் தமிழ் படம் என்பதை உணர்ந்து இருவரும் பேசினால் நல்லது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also Read: பொன்னியின் செல்வன் போல் உருவாகும் நாவல்.. 12 வருடம் கழித்து சர்ச்சை கதையை இயக்கும் சசிகுமார்

Trending News