திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எப்படி பார்த்தாலும் வாரிசை அடக்க பார்க்கும் துணிவு.. கவுண்டவுன் பார்த்து ஒன்னுமே பண்ண முடியல என வருந்தும் விஜய்

துணிவு மற்றும் வாரிசு ! சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக 24 மணி நேரமும் பிரேக்கிங் நியூஸ் ஆக இருந்து கொண்டிருக்கும் தலைப்பு. படத்தலைப்பு, படத்தின் புகைப்படங்கள், படத்தின் பாடல்கள், படத்தின் விநியோக உரிமை தற்போது எந்த படத்திற்கு எத்தனை திரையரங்குகள் என்பதுவரை செய்திக்கு பஞ்சமின்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருந்துகொண்டிருக்கிறது.

தற்பொழுது அன்மை தகவலின்படி “வாரிசு படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் சில ஏரியாக்களை ரெட் ஜெயின்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. அதில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, நார்த் ஆற்காடு ,சவுத் ஆற்காடு, கோயமுத்தூர் ஆகிய ஏரியாக்களில் ரெட் ஜெயின்ட்  நிறுவனம் இப்படத்தை  வெளியிடுகிறது.

Also Read: வாரிசு! துணிவு! முதலில் எந்த படம் போவீங்க? ரசிகர்களிடம் சிக்காத மாதிரி ஒரு பதில் சொன்ன H.வினோத்

651 ஸ்கிரீன்கள் கொண்ட இந்த ஏரியாக்களில் 326 ஸ்கிரீன்கள் துணிவு படத்திற்கும் 325 ஸ்கிரீன்கள் “வாரிசு” படத்திற்கும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி மற்ற ஏரியாக்களான மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் திரைப்படத்திற்கு 300 ஸ்கிரீன்களும் வாரிசு படத்திற்கு 153 ஸ்கிரீன்கள் ஒதுக்கப்பட்டு பட்டிருப்பதாக தகவல்.

ஆரம்பம் முதலே துணிவு திரைப்படத்திற்குதான் அதிக ஸ்கிரீன்கள் ஒதுக்கப்படும் பல்வேறு தரப்புகளில் பேசப்பட்டது. தற்போது இந்த தகவல்களை கேட்கும் பொழுது திரையரங்குகள் ஒதுக்கீட்டில் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் ஆதிக்கம் இருப்பதாகவே கருதமுடிகிறது. இது விஜய் அவர்களின் முதல் நாள் படத்தில் வசூலை நிச்சயமாக பாதிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Also Read: வாரிசு படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா.. அனல் பறக்கும் அப்டேட்டை கொடுத்த ராஜு பாய்

முதல் நாள் வசூலை பொருத்தே அடுத்த படத்திற்கான சம்பளத்தை முடிவெடுக்க முடியும் என்ற நிலை. கடந்த பீஸ்ட் படத்தினை விட தற்போது வாரிசு படத்திற்கான தியேட்டர்கள் மிகவும் குறைவாக உள்ளதால் விஜய் படத்தின் முதல் நாள் வசூல் பீஸ்ட் படத்தினை விட குறையும் என்பது நிச்சயம்.

எதுவாக இருந்தாலும் தனது ரசிகர் மன்றம் சந்திப்பின் மூலம் தனது படை பலத்தை நிரூபிக்க இரண்டு முறை முயற்சித்தார் விஜய். தற்போது துணிவு படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருப்பதால், டிசம்பர் 24 அன்று நடக்கப் போகும் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்யின் அரசியல் பஞ்ச் வசனங்களுக்கு பஞ்சம் இருக்காது!

Also Read: வாரிசு ஹீரோ முதலில் விஜய் இல்லையாம்.. வாயை விட்டு வம்படியாக மாட்டிக் கொண்ட தில் ராஜு

Trending News