திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரேஸில் எப்போதுமே நாங்க தான் ஃபர்ஸ்ட்.. 7 வருடத்திற்கு முன்பே ரஜினி, கமலை பின்னுக்கு தள்ளிய அஜித்

கோலிவுட்டில் பண்டிகை அன்று திரையிடப்படும் படங்களைக் குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருப்பார்கள். அந்த வகையில் 8 வருடங்களுக்குப் பிறகு இந்த வருட பொங்கல் பண்டிகைக்கு தல, தளபதி இருவரின் படங்களான துணிவு மற்றும் வாரிசு படங்கள் ரிலீஸ் ஆகிறது. இன்னிலையில் ரேஸில் பெஸ்ட் நான்தான் என்று 7 வருடத்திற்கு முன்பே அஜித் நிரூபித்து இருக்கிறார்.

ஆனால் இப்போது தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன். ஆகையால் அவருக்கு தான் அதிக ஸ்கிரீனிங் கொடுக்க வேண்டும் என தில் ராஜு சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் தமிழகத்தில் நம்பர் ஒன் யார் அஜித்தா? அல்லது விஜய்யா? என பல விவாதங்கள் எழுந்திருக்கிறது.

Also Read: எது பேசினாலும் சர்ச்சையாகிறது.. நான் நிறைய சாதிக்கணும், வாரிசு படத்தால் நொந்து போன பிரபலம்

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல திரை விமர்சகர்கள் ராஜசேகர் மற்றும் ரமேஷ் பாலா அளித்த பேட்டியில் சில விஷயத்தை உடைத்து பேசி இருக்கின்றனர். தமிழகத்தில் நிச்சயம் அஜித் தான் ரசிகர்களின் மத்தியில் விஜய்யை விட முன்னிலை வகிப்பவர் என்றும் அவருக்குத்தான் தமிழகத்தில் மாஸ் அதிகம் இருப்பதால் அவர்தான் நம்பர் ஒன்  என்று வெளிப்படையாக பேசுகின்றனர்.

இதற்கு சான்றாக அஜித்தின் நிறைய படங்களை பெரிய பெரிய நடிகர்களுடன் வெளியிடும்போது அந்த ரேஸில் முன்னிலை வகித்ததையும் குறிப்பிட்டுள்ளனர். அதாவது 2015 ஆம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி  ஒரே நாளில் அஜித்தின் வேதாளம் மற்றும் உலக நாயகனின் தூங்காவனம் போன்ற இரண்டு படங்களும் ரிலீஸ் ஆனது. இதில் வேதாளம் படத்திற்கு தான் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read: விஜய்யின் சோலியை முடிக்க திட்டம் தீட்டிய விஷால்.. வலையில் சிக்குவாரா தளபதி

அதேபோன்று 2019 ஜனவரி 10 ஆம் தேதி அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட போன்ற இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் தாறுமாறாக வரவேற்பை பெற்றது. இருப்பினும் குடும்ப கதைய அம்சம் கொண்ட விஸ்வாசம் படம் தான் அதிக நாட்கள் ஓடி பேட்ட படத்தை பின்னுக்கு தள்ளியது.

இருப்பினும் பேட்ட வெளிநாடுகளில் மாஸ் காட்டியதும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்றுதான் அஜித்தின் வீரம் திரைப்படம் மற்ற இடங்களை விட தமிழகத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆகையால் தான் வாரிசு, துணிவு இடையேயான போட்டியில், மற்ற இடங்களை காட்டிலும் தமிழகத்தில் நிச்சயம் துணிவு தான் முன்னிலை வகிக்கும் என்றும் அடித்து கூறுகின்றனர்.

Also Read: விஜய்க்கு விரித்த வலையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்.. மெகா கூட்டணியில் இணைந்த இளம் இயக்குனர்

Trending News