பிரபல நடிகராக அறியப்படும் விதார்த்துக்கு சொந்த வீடு கூட இல்லை என்று கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்னலே திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விதார்த். இப்படத்தை அடுத்து சூர்யாவின் மெளனம் பேசியதே, ஸ்டூடண்ட் நம்பர் 1, சண்டக்கோழி, கொக்கி, திருப்பதி, லீ, குருவி, லாடம், வீரம் உள்ளிட்ட படங்களில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பின், கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் அமலா பாலுடன் விதார்த் இணைந்து நடித்த படம் மைனா. இப்படத்தில்தான் அவர் ஹீரோவாக அறிமுகமான நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விதார்த்திற்கு தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன.
இப்படத்தை அடுத்து குருசாமி, கொள்ளைக்காரன், மயிலு, ஜன்னல் ஓரம், காடு, குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை, காற்றின் மொழி, சித்திரம் பேசுதடி 2, கட்டில், டெவி ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படி சினிமாவில் தொடர்ந்து நடித்து தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் மூலம் நடித்து தன் திறமையின் மூலம் இன்று சிறந்த நடிகராக அறியப்படும் விதார்த் இன்னும் அவரது சக கால நடிகர்களைப்போல் அதிக ஹிட் படங்களையோ, அல்லது 100 கோடி கிளப்புக்குள் நுழையவில்லையே என்ற பெரிய கேள்வியை ரசிகர்கள் எழுப்பினர்.
சொந்தமாக வீடு இல்லை
சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு விதார்த் தனது மனைவியுடன் பேட்டியளித்தார். அதில், ’’நான் திருமணம் செய்யும் எண்ணத்திலேயே இல்லை. என் தம்பிகளுக்கு எல்லாம் திருமணம் செய்துவிட்டு அப்படியே சிங்கிலாக இருக்கலாம் என நினைத்தேன். என் அப்பாதான் கட்டாயம் என்னை திருமணம் செய்துகொள் என்றார். என் தம்பி என்னிடம் ஒரு புகைப்படத்தை காட்டி, இவங்க பழனி என்றார். அவர்களிடம் பேசுவோம் என்றேன்.
அப்போது நான் கோவையில் இருந்தேன். அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர், அவர்களிடம் இருந்து போன் வந்தது. 10 நிமிடம் பேசினோம் பிடித்திருந்தது. அதன்பின், இரண்டு வீடுகளிலும் பேசித் திருமணம் செய்து வைத்தனர் என்றார்.
மேலும், ஒரு கிராயின் கருணை மனு படத்தில் நடித்தபோது, அட்வான்ஸ் தொகைகூட இல்லை சம்பளம்.
நாங்க தனியாக இருக்க முடிவெடுத்தபோது வீடும் சொந்தமாக இல்லை. ஆபிஸில் வந்து படுத்துக் கொள்வோம். காலையில் உதவி இயக்குனர் வீட்டில் மனைவியை விட்டுவிட்டு போவேன். அந்த சமயத்தில் காரை விற்று பைக்கில்தான் சுற்றினோம். அப்போது நடிகர்களுக்கு வீடு தேடுவது கஷ்டம்’’ என்று கூறியதுடன் தான் வசித்து வரும் வீட்டை வாங்கிய அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
விதார்த்தின் மனைவி காயத்ரி பேசியதாவது:
’’எங்களுக்கு திருமணம் முடிந்த நேரத்தில்தான், குற்றமே தண்டனை படத்தில் நடித்திருந்தார். அப்படத்தை ரிலீச் பண்ணுவதிலும் அடுத்த 6 மாதம் வரையிலும் பெரிய ஸ்டரகுல் ஏற்பட்டது. அப்படம் வசூல் ரீதியாக பெரிதாக போகவில்லை என்றாலும், அப்படம் அவருக்கு பிரேக் கொடுத்தது. அப்படத்திற்கு பிறகுதான், ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை போன்ற படங்களில் நடித்தர்.
ஒரு கிடாயின் கருணை மனு 40 நாட்கள் ஷூட்டிங் நடந்தது. அது எனக்குப் பிடித்த படம். அந்த 40 நாட்களும் நான் அவருடன் தான் இருந்தேன். அதன்பின், ஒரு வருடத்தில் எல்லாம் பார்த்தேன். ஒரு படம் எடுப்பது, அதற்கான பிசினஸ், மக்களிடம் எப்படி அப்படத்தை சேர்ப்பது என அனைத்தையும் தெரிந்துகொண்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.