ஆயுதங்களை வைத்தே வெளியிடும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்.. சீரழியும் சினிமா

படங்கள் வெளியாகும் முன் அவற்றை பற்றி போஸ்டர்களும், முன்னோட்டங்களும் வெளிவருவது சகஜமான விஷயம் தான். இதையெல்லாம் வைத்து அந்த படம் எப்பேர்ப்பட்ட படம் என்பதை வெளிப்படுத்த மட்டுமே.

ஆனால் சமீபத்தில் வெளியான தமிழ் சினிமாவின் முதற்கட்டபிரஸ்ட் பட போஸ்டர்களில் காணப்படும் ஒரு ஒற்றுமை ஹீரோக்கள் அதில் ஆயுதங்களுடன் இருப்பது தான். அது படத்தை சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும் அது சில இடங்களில் தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது.

படம் குடும்ப பின்னணியில் இருந்தும் அதற்கு வெளியிடும் போஸ்டர்களில் ஹீரோக்கள் ஆக்ரோஷமாக காட்சி அளிக்கிறார்கள். அண்மையில் வெளியான அண்ணாத்த, எதிர்க்கும் துணிந்தவன் போன்ற படங்களின் கதை குடும்ப பின்னணியில் இருந்தும் அவற்றின் போஸ்டர்களில் ரஜினியும், சூரியாவும் கத்தியுடன் காட்சி அளிக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க படங்களின் காட்சி அமைப்பால் சீரழியும் இளைய தலைமுறையினரை தவறாக சிந்திக்க வைக்கின்றன. வலிமை திரைப்படத்தில் இடம்பெற்ற பைக் சண்டை காட்சிகள் பெரும்பாலான இளைய தலைமுறையினரை அதே போல் ஸ்டண்ட் செய்ய தூண்டியதை பரவலாக காணமுடிந்தது.

surya-Rajini
surya-Rajini

சில ஆண்டுகள் முன்பு சர்கார் திரைப்படம் போஸ்டர்களில் விஜய் சிகரெட் பிடிக்கும் படி இருந்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. பின்னர் அதனை படக்குழு நீக்கியது. அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக தன்னுடைய ரசிகர்களை சிகரெட் புடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட செய்திகளும் பல வெளிவந்தன. இருந்தும் ரசிகர்கள் சினிமாவில் பார்த்து புகைப்பிடிப்பது பெரிதும் அடங்கியவாறு தெரியவில்லை.

Beast
Beast

சினிமாவில் காட்டப்படும் ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் அனைத்தும் போலியானது என ரசிகர்கள் தாங்களே உணர வேண்டும். சினிமாவை ரசிகர்கள் ரசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சீரழியும் இளைய தலைமுறையினரை எவராலும் திருத்தவோ, மாற்றவோ முடியாது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →