புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சும்மா மைக் கிடைச்சிடுனு பேசிய அருண்விஜய்.. வாய்ப்பேச்சு வேலைக்கு ஆகாது

Actor Arunvijay : அருண் விஜய் இப்போது சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ள நிலையில் அவரது படங்கள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வருகிறது. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற அடம் பிடிக்காமல் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது தான் அவரது சினிமா கேரியரை திருப்பி போட்டது.

இப்போது அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. இந்த சூழலில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் அருண் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏனெனில் சமீபத்தில் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அருண் விஜய் அஞ்சலி செலுத்து இருந்தார்.

அப்போது எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக எல்லோருக்கும் வயிறார சாப்பாடு போட்டது விஜயகாந்த் தான். அதோடு மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் ஒரே சாப்பாடு தான். விஜயகாந்த் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த நிலையில் அதில் ஒன்றாவது நாம் பின்பற்ற வேண்டும் என்று அருண் விஜய் கூறியிருந்தார்.

Also Read : விஜயகாந்த் முதுகில் குத்திய வடிவேலு கலைஞர் 100 விழாவிற்கு என்டரி.. லைஃபை தொலைச்சிட்டியே பங்காளி

அதன்படி இனி வரும் காலங்களில் என்னுடைய படப்பிடிப்பு தளத்திலும் எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான் என்று அருண் விஜய் மைக் கிடைத்தது என்று கூறிவிட்டார். ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் இது சாத்தியமா என்பது கேள்விக்குறிதான். அதுவும் படப்பிடிப்பில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு அருண் விஜய் போட முடியாது.

அது எல்லாமே தயாரிப்பாளர் உடைய வேலை தான். அதோடு மட்டுமல்லாமல் விஜயகாந்த் இருந்த வரையில் தன்னுடைய படங்களில் நடிப்பவர்களுக்கு சொந்த செலவில் தனது வீட்டில் இருந்து சாப்பாட்டை வரவழைப்பார். இப்போது உள்ள காலகட்டத்தில் அருண் விஜய் இவ்வாறு வாய்ப்பேச்சுக்காக சொல்வதெல்லாம் நடக்காத காரியம் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read : விஜயகாந்த் இறந்த செய்தி கேட்டு வடிவேலு என்ன செய்தார் தெரியுமா? வக்காலத்து வாங்கிய அரசியல்வாதி

Trending News