விஜய் டிவி பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்.. வைரலான செந்தில்-ராஜலக்ஷ்மி வீடியோ!

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர், இப்போது பக்தி பாடல்கள் சுற்றுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களை ஆன்மீக இசையால் கவரும் இந்த கட்டத்தில், முக்கிய அதிரடி – செந்தில் – ராஜலட்சுமி ஜோடி மீண்டும் மேடையை பகிர்ந்துள்ளனர்.

இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து கஷ்டத்தை பொருட்படுத்தாமல் தனது திறமையான பாடல்கள் மூலம் இன்று நல்ல நிலையில் இருக்கின்றனர்.

சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான இந்த ஜோடி, பக்தி பாடல்கள் சுற்றில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டதை பெரிய சந்தோஷமாக கருதுகின்றனர்.

இவர்கள் நிகழ்ச்சிக்கு வந்தபோது தனியாக ஒரு தனி ‘Caravan’ வசதி வழங்கப்பட்டதாகவும், இது ஒரு எதிர்பாராத அனுபவமாக இருந்ததாகவும், ராஜலட்சுமி தன் வீடியோவில் சந்தோஷமாக பகிர்ந்துள்ளார்.

இது நம்ம கற்பனைக்கும் மேலதான்! இந்த மரியாதை மிக்க மகிழ்ச்சியானது,” என சந்தோஷத்துடன் கூறியுள்ளார் ராஜலட்சுமி.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில், இந்த ஜோடிக்கு மீண்டும் கிடைத்த இந்த அங்கீகாரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →