வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அட்லி தம்பியை மிஞ்சிய லோகேஷ் ப்ரோ.. விஜய்க்காக மொத்த பழியையும் ஏற்றுக்கொண்ட லோகி

Lokesh-Vijay: விஜய்க்காக எதையும் செய்யும் அன்பு தம்பியாக இருந்தவர்தான் அட்லி. அதோடு மட்டுமல்லாமல் பல கஷ்டமான சூழ்நிலைகளில் விஜய் மற்றும் சங்கீதா தங்களுக்கு பக்க பலமாக இருந்ததாக பிரியா அட்லி பலமுறை கூறியிருக்கிறார். மேலும் மீண்டும் விஜய் மற்றும் அட்லி காம்போ எப்போது உருவாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் பிகில் படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கதாபாத்திரத்தை முழு படமாக அட்லி இயக்கம் திட்டத்தில் இருக்கிறார். ஆனால் அதற்குள் பாலிவுட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது அட்லியை மிஞ்சும் அளவிற்கு லோகேஷ் சம்பவம் செய்து வருகிறார்.

அதாவது லோகேஷ் லியோ படத்தின் ப்ரோமோஷனுகாக பல்வேறு ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அதுவும் விஜய் அப்படி செய்தார், இப்படி செய்தார் என்று சென்ற இடமெல்லாம் புகழாரம் தான். சில இடங்களில் ஓவர் பில்டப் கொடுக்கிறாரோ என்று ரசிகர்களுக்கே இவரது பேச்சு தோண வைக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் லியோ படத்தின் டிரைலரில் இடம் பெற்ற கெட்ட வார்த்தை பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தது. ஆனால் இதைப் பற்றி லோகேஷ் பேசும் போது ஆரம்பத்தில் விஜய் இந்த வார்த்தையை சொல்ல ரொம்பவும் யோசித்தார். அதன் பின்பு என்னுடைய வற்புறுத்தலின் காரணமாக தான் கூறினார்.

ஆகையால் அதற்கு முழு பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாக லோகேஷ் கூறியிருந்தார். பொதுவாக விஜய் சொன்னால் லோகேஷ் கேட்டு தான் ஆக வேண்டும். அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. அதை கொஞ்சம் கூட யோசிக்காமல் மிகவும் மோசமான கெட்ட வார்த்தையை பேசி இருக்கிறார்.

இப்போது விஜய்க்கு முட்டு கொடுப்பதற்காக முழு பழியையும் தனது மேல் போட்டுக் கொண்டிருக்கிறார் லோகேஷ். இதற்கெல்லாம் காரணம் இல்லாமலும் அவர் செய்யவில்லை. மாஸ்டர், லியோ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் உடன் கூட்டணி போடுவதற்காக தான் இவ்வாறு செய்து வருகிறார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Trending News