ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பணத்தாசையில் ரம்பா கணவர் செய்த காரியம்.. பதறிப்போன தமன்னா

Rambha – Tamannah : பிரபல நடிகைகள் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் நடிகை ரம்பாவும் தொழிலதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இப்போது ரம்பாவின் கணவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது தொழிலதிபராக இருக்கும் இந்திரகுமார் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரம் கலை விழா இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சி பல அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி இருந்தது.

அதாவது இந்நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் கட்டணம் பெற்றவர்கள் இருக்கைகளாலும், இலவசமாக பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சியை இலவசமாக நடத்தலாம் என்று தான் இந்திரகுமார் எண்ணி இருந்தாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.

Also Read : அம்மாவையே அழகில் ஓவர்டேக் செய்யும் ரம்பாவின் மகள்.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்

அதன் பிறகு பணத்தாசையால் நிகழ்ச்சியை வேறு மாதிரி ஏற்பாடு செய்திருந்தார். அதாவது தமன்னாவுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து இந்நிகழ்ச்சியில் ஆட வைத்துள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியை பார்க்க வருபவர்களுக்கு முதல் இருக்கை 40,000 அதற்கு அடுத்தபடியாக 10,000 அடுத்ததாக 5000 எனில் உள்ளனர்.

ஆனால் ஒழுங்கான கட்டமைப்பு இல்லாததால் தமன்னா நடனம் ஆடும் போது ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு ஸ்டேஜில் ஏறி தள்ளுமுள்ளில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இதனால் போலீசார் தடிஅடி நடந்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கெல்லாம் ரம்பாவின் கணவர் இந்திரகுமாரின் பணத்தாசை தான் காரணம் என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.

Also Read : ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி.. அருணாச்சலம் ஷூட்டிங்கில் நடந்தது என்ன.? பரபரக்கும் மீடியா

Trending News