வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ட்விட்டரை தன்வசப்படுத்திய சோழர்கள்.. பொன்னியின் செல்வனால் திரிஷா, ஜெயம் ரவி ஏற்பட்ட பரிதாப நிலை

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்த நிலையில் இப்படத்தில் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.

இதற்கான பிரமோஷன் வேலைகள் தற்போது தடபுடலாக நடந்து வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா போன்ற பிரபலங்கள் பல இடங்களுக்கு சென்று பொன்னியின் செல்வன் படத்திற்கான பிரமோஷனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இப்போது சோழர்கள் ட்விட்டரை தன் வசப்படுத்தி உள்ளனர்.

Also Read: 2 திருமணம் செய்து விவாகரத்தான சரத்குமார்.. பொன்னியின் செல்வன் 2 விழாவில் பார்த்திபனுக்கு நடந்த அவமானம்

அதாவது பொன்னியின் செல்வன் படம் வெளியாவதை முன்னிட்டு ட்விட்டரில் தினமும் பொன்னியின் செல்வன் 2 ஹேர்டேக் டிரெண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தங்களது ட்விட்டரில் குந்தவை மற்றும் அருள்மொழி வர்மன் என பெயரை மாற்றி உள்ளனர்.

jayam-ravi
jayam-ravi

பொதுவாக சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், முக்கிய நபர்களுக்கு கொடுக்கும். ட்விட்டரின் புதிய விதிப்படி பிரபலங்கள் பெயரை மாற்றினால் ப்ளூ டிக் மறைந்துவிடும். அதன்படி தற்போது திரிஷா மற்றும ஜெயம் ரவிக்கு ப்ளூ டிக் மறைந்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்காக இவ்வளவு பெரிய ரிஸ்கை இருவரும் எடுத்து உள்ளனர்.

.Also Read: அஜித்தால் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.. லைக்கா எடுத்த திடீர் முடிவு

அதுமட்டுமின்றி தினமும் திரிஷா பிரமோஷனுக்கு வரும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அழகு பதுமையாக இருக்கும் திரிஷா இப்போதும் அதே அழகுடன் உள்ளார். குந்தவை கதாபாத்திரம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள த்ரிஷாவுக்கு இப்போது தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் திரிஷா நடித்து வருகிறார். இது தவிர முன்னணி நடிகர்களின் படங்களிலும் திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். மேலும் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாக உள்ள படத்தில் திரிஷா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

.Also Read: 2ம் பாகத்தில் டல் அடிக்கும் பொன்னியின் செல்வன்.. சுதாரிக்காமல் கோட்டை விட்ட மணிரத்தினம்

Trending News