வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மீண்டும் வம்பை விலைக்கு வாங்கும் விக்ரம்.. சாமி 2-வில் வாங்கிய அடி போதாதா சார்

Actor Vikram: சீயான் விக்ரம் இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. இந்நிலையில் தற்போது விக்ரம் வம்பை விலை கொடுத்து வாங்கும் படியாக ஒரு சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்.

சமீபகாலமாக பார்ட் 2 படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கமல், ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 படம் உருவாகிறது. சமீபத்தில் கூட லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படம் வெளியாகி இருந்தது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாமல் தோல்வியை தழுவியது. இவ்வாறு இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் சில படங்கள் மட்டுமே வெற்றியை பெறுகிறது.

இப்போது திடீரென விக்ரம் தன்னுடைய படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார். ஏற்கனவே இவருக்கு சாமி 2 படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இவ்வாறு இந்த படத்தில் அடி வாங்கியும் மீண்டும் பார்ட் 2 எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதாவது விக்ரம், கௌதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம் படம் பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஏனென்றால் நிதி நெருக்கடியால் படத்தை வெளியிட முடியாமல் கௌதம் மேனன் கஷ்டப்பட்டார். இப்போது படம் நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் சமீபத்தில் டிரைலர் வெளியானது.

ஆனால் இப்போது விக்ரம் மும்பை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டு துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறாராம். முதல் பாகம் எடுத்தே பல வருடங்களாக ரிலீஸ் செய்ய முடியாமல் படாதபாடு பட்டு வரும் நிலையில் அதற்குள்ளாகவே இரண்டாம் பாகம் தேவையா என ரசிகர்கள் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் படக்குழு தரப்பில் இருந்து முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருப்பதாக உறுதியளித்துள்ளனர். ஆகையால் துணிந்து தான் இரண்டாம் பாகத்தை எடுக்க முன்வந்துள்ளனர். அடுத்த வருடம் சியான் விக்ரமின் வருடமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால் தங்கலான், துருவ நட்சத்திரம் என இரண்டு படங்களுமே அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

Trending News