ஹீரோ வாய்ப்பா வேண்டவே வேண்டாம்.. விக்னேஷ் சிவன் அழைத்தும் மறுத்த நடிகர், நடிகை

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான காத்துவாக்குல 2 காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் கொடுத்த ஹீரோ வாய்ப்பை பிரபலம் ஒருவர் மறுத்துள்ளார்.

அதாவது முதல் முதலாக சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக விக்னேஷ் சிவன் அறிமுகமானார். இந்தப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கிய படம் நானும் ரவுடி தான். இப்படத்திற்காக பல ஹீரோக்களை அணுகியுள்ளார் விக்னேஷ் சிவன்.

அப்போது இவரின் நெருங்கிய நண்பரான அனிருத் மற்றும் சமந்தாவை முதலில் தேர்வு செய்துள்ளார். இதனால் அனிருத்தை புக் செய்துவிட்டு விக்னேஷ் சிவன் காத்திருந்தார். அப்போது அனிருத் பல படங்களில் பிஸியாக பணியாற்றி வந்தார்.

அதுமட்டுமல்லாமல் அனிருத்துக்கு இசையில் ஆர்வம் இருப்பதால் அவரது பெற்றோரும் அனிருத் நடிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளனர். இதனால் அனிருத் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகு நீண்ட நாட்களாக தேடி அலைந்த பின்பு விக்னேஷ் சிவன் கண்ணில் பட்டவர் தான் விஜய் சேதுபதி.

அப்போது நட்பின் காரணமாக விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் படத்தில் நடிக்க சம்மதித்தார். ஒருவழியாக போராடி ஹீரோவை புக் செய்த விக்னேஷ் சிவனுக்கு காத்திருந்தது பெரிய அடி. படம் எடுப்பதற்கு ரொம்ப லேட் ஆனதால் இந்த படத்தில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டார்.

அதன் பின்புதான் நயன்தாரா இப்படத்தில் தேர்வானார். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. அது மட்டுமல்லாமல் தற்போது நட்சத்திரா ஜோடியாக இருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலுக்கு அடிதளம் போட்டது நானும் ரவுடிதான் படம்.