Sirkadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், தப்பு பண்ணினால் ஒரு நாள் தண்டனை அனுபவித்து தான் ஆகணும் என்பதற்கு ஏற்ப ரோகிணி தொடர்ந்து பொய்யும் பித்தலாட்டங்களையும் பண்ணி ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வருகிறார். அந்த வகையில் எப்பொழுது ரோகிணியின் உண்மையான ரகசியம் வெளிவரும் என்று அனைவரும் காத்துக் கொண்டிருந்தோம்.
அதற்கான தருணம் தற்போது நெருங்கி விட்டது என்பதற்கு ஏற்ப 27 லட்ச ரூபாய் பணம் ரோகிணி அப்பா கொடுக்கவில்லை. ஜீவாவிடம் இருந்து வட்டியும் முதலுமாக 30 லட்சம் ரூபாயாக வாங்கிய பின் அந்த பணத்தை வைத்து தான் ஷோரூம் ஆரம்பித்து இருக்கிறார்கள் என்ற விஷயம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்து விட்டது.
அதனால் அதற்கான சரியான தீர்ப்பை கொடுக்க வேண்டும் என்பதற்காக முத்து, இந்த ஷோரூம் அப்பாவின் பணத்தால் ஆரம்பிக்கப்பட்டது என்பதால் இனி அவர்தான் ஓனராக இருக்க வேண்டும். மனோஜ் அந்த கடையில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் தான் என்ற தீர்ப்பை சொல்லி கடைக்கு ஒட்டுமொத்த குடும்பத்தையும் கூட்டிட்டு போய் அனைவரது முன்னிலையிலும் அண்ணாமலையை ஓனராக உட்கார வைத்து விட்டார்.
இதனை தொடர்ந்து முத்து மற்றும் மீனா இருவரும் சேர்ந்து கோயிலுக்கு போகிறார்கள். அங்கே ஒரு வயதான தம்பதியர்கள் திருமண நாளை கொண்டாடுவதற்காக வந்திருக்கிறார்கள். இவர்கள் மீனாவுக்கு தெரிந்தவர்கள் என்கிற முறையில் ஆசீர்வாதம் பண்ணி விட்டார்கள். அத்துடன் மீனா, முத்துமிடம் இவர்களை நம் வீட்டிற்கு கூட்டிட்டு போய் சாப்பாடு கொடுக்கலாம்.
அதோடு இவங்க மலேசியாவில் இருந்து தான் வந்திருக்கிறார்கள் என்பதால் ரோகிணி அப்பா பற்றிய விவரத்தையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று ஐடியா கொடுக்கிறார். உடனே முத்துவும் இது சரியான யோசனையாக இருக்கிறது என்று அந்த தம்பதிகளை வீட்டிற்கு கூட்டிட்டு போகப் போகிறார். போனதும் குடும்பத்தில் இருப்பவர்களை ஒன்றாக நிற்க வைத்து இவர் மலேசியாவில் இருந்து வந்திருக்கிறார்.
ரொம்ப வருஷமாக அங்கு தான் இருக்கிறார், அதனால் ரோகிணியின் அப்பாவை பற்றிய விஷயத்தையும் தெரிந்து கொண்டு அவர் இப்பொழுது என்ன நிலைமையில் இருக்கிறார் எப்படி வெளியே கூட்டிட்டு வரலாம் என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம் என முத்து சொல்ல போகிறார். உடனே விஜயாவும் இவரிடம் கேட்டுக் கொண்டால் ரோகிணியின் அப்பா வெளியே வந்து விடுவார்.
அத்துடன் நமக்கு தேவையான பணமும் கிடைத்துவிடும் என்பதால் விஜயாவும் முத்து சொன்னபடி அந்த தம்பதிகளிடம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். அப்பொழுது அந்த தம்பதிகள் ரோகினிடம், உங்க அப்பா பெயர் என்ன எந்த இடத்தில் இருக்கிறாங்க என்ன பிசினஸ் பண்றாங்க என்று கேள்வி கேட்கப் போகிறார்கள்.
ஆனால் இதற்கு எதுவுக்கும் பதில் இல்லாததால் ரோகிணி என்ன சொல்வது என்று தெரியாமல் குடும்பத்தின் முன் திருட்டு முழி முழித்துக் கொண்டு நிற்கப் போகிறார். என்னதான் ரோகினி மறுபடியும் இதில் பொய் சொல்லி சமாளித்தாலும் முத்துவுக்கு நிச்சயம் ரோகினி மீது சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிவிடும். அதனால் முத்து, அந்த பிரவுன் மணி மற்றும் மலேசியா அப்பா பற்றி ரகசியத்தை கண்டுபிடித்து கல்யாணியின் உண்மையான முகத்திரையை வெளிக்கொண்டு வந்துவிடுவார்.
அந்த வகையில் கசாப்பு கடை வைத்திருக்கும் பிரவுன் மணி முத்து கண்ணில் சிக்க போகிறார். இதன் மூலம் மறுபடியும் பூகம்பம் வெடிக்க போகிறது. இப்படி ரோகிணி திரும்புற இடமெல்லாம் கண்ணிவெடியை வைத்து தாக்கும் முத்துவின் ஆட்டம் அதிரடியாக இருக்கப் போகிறது.