புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

ஆமா! ரஞ்சித் தான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்காரே.. பாக்யலட்சுமியில் அவரோட பழனிசாமி கேரக்டர் என்ன ஆச்சு?

Bigg Boss 8: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஆன பிக் பாஸ் எட்டாவது சீசன் கடந்த ஆறாம் தேதி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் என 18 போட்டியாளர்கள் இந்த முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

முதல் வாரம் ரவீந்தர் மற்றும் அதற்கு அடுத்த வாரம் தர்ஷா குப்தா என இருவர் எலிமினேட் ஆகியிருக்கிறார்கள். இந்த சீசனில் வயதான போட்டியாளர் கேட்டகிரியில் உள்ளே நுழைந்திருப்பவர் தான் நடிகர் ரஞ்சித்.

நேசம் புதுசு, நட்புக்காக என 90களில் காலகட்டத்தில் நிறைய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானார் ரஞ்சித். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியல் மூலம் மீண்டும் மீடியாவுக்கு கம் பேக் கொடுத்தார்.

பழனிசாமி கேரக்டர் என்ன ஆச்சு?

செந்தூரப்பூவே சீரியலில் ஹீரோ கேரக்டரில் நடித்த ரஞ்சித் பாக்கியலட்சுமி சீரியலில் சப்போர்டிங் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். பழனிசாமி என்னும் பெயரில் வரும் எந்த கேரக்டர் பாக்யாவுக்கு சீரியல் முழுக்க பல இடங்களில் உதவும் கேரக்டராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பாக்யா மீது ஒரு தலை காதல் இருந்தாலும், அதையும் மறைத்துக்கொண்டு நட்பாக அந்த குடும்பத்துடன் பழகுவது போல் கேரக்டர். இந்த நிலையில் சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் உணவில் கலப்படம் செய்ததாக பாக்யலட்சுமிக்கு எக்கச்சக்க பிரச்சனைகள் வந்தது.

எப்போதுமே பாக்யாவுக்கு ஒண்ணுன்னா முன்னாடி வரும் பழனிசாமி இந்த முறை இல்லை. அவர் பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார். சரி இவர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து விட்டாரே, அந்த பழனிசாமி கேரக்டரை என்ன பண்ணினார்கள் என்று எல்லோருக்கும் சந்தேகம் வரும்.

பழனிசாமி கேரக்டர் டீசன்ட் ஆக பாக்யாவிடம் வந்து வேலை விஷயமாக துபாய்க்கு போவதாகவும், இரண்டு மூன்று மாதங்களில் திரும்பி வருவதாகவும் சொல்வது போல் காட்சி அமைக்கப்பட்டு விட்டது. இணையவாசிகள் இந்த வீடியோவை வைரல் ஆக்கி, மேடம் அவர் பொய் சொல்றாரு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் தான் இருக்கிறார் என நக்கலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Baakiyalakshmi
Baakiyalakshmi
- Advertisement -spot_img

Trending News