எதிர்நீச்சல் 2 சீரியலில் புத்தி தெளிந்த சக்தி, அதிர்ச்சியில் ஜனனி.. ஓவராக ஆடிய அறிவுக்கரசிக்கு ஆப்பு வைக்கும் பார்கவி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரனின் தம்பிகள் எந்த நேரத்தில் எப்படி மாறுவார்கள் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு தான் ஒவ்வொருவரும் தினுசு தினுசாக இருக்கிறார்கள். ஆனால் குணசேகரன் மாதிரி கொஞ்சம் அராஜகம் பண்ணும் அளவிற்கு ஞானம் இருந்தாலும் அடிமனதில் கொஞ்சம் இரக்க குணமும் நல்லது கெட்டதை பார்த்து பண்ண வேண்டும் அளவிற்கு புத்தி இருக்கிறது.

ஆனால் கதிர், குணசேகரனையே மிஞ்சும் அளவிற்கு அடாவடியாக அராஜகத்தை பண்ணி வருகிறார். இதில் சக்தி எந்த ரகம் என்று தெரியாமல் இத்தனை நாளாக ஜனனி பின்னாடி சுற்றி வந்தார். ஆனால் எல்லோரும் சக்தியை மட்டமாக நினைத்து அவமானப்படுத்தி பேசியதை நினைத்து தற்போது ஃபீல் பண்ண ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் தனக்கும் மனசு இருக்கு அதில் ஆசை பாசங்கள் விருப்பு வெறுப்பு என்பது இருக்கும் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

நானும் மற்றவர்களுக்காக யோசித்து யோசித்து பல விஷயங்களை அடக்கி மறைத்து வைத்திருப்பது என் மீதும் தவறு இருக்கு என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அதனால் கொஞ்ச நாளைக்கு என்னை என் போக்கில் விட்டுவிடு என்று ஜனனிடம் மன்றாடம் அளவிற்கு சக்தி கொஞ்சம் புத்தியுடன் பேசுவது போல் இருக்கிறது. இனி அடுத்து வரும் காட்சிகளில் சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கதைகள் அமைந்தால் இன்னும் விறுவிறுப்பாக சீரியல் போகும்.

இதற்கிடையில் ஜனனி, பார்கவியை வைத்து தர்ஷன் மீது மகளிர் காவல்நிலத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதை வாபஸ் வாங்க வைக்க வேண்டும் என்பதற்காக அறிவுக்கரசி கிரிமினலாக சில வேலைகளை பார்க்க துணிந்து விட்டார். அந்த வகையில் பார்க்கவி மீது தவறான பொய்களை சொல்லி கேரக்டரை அசிங்கப்படுத்தும் விதமாக பார்க்கவி மற்றும் அவருடைய அப்பாவை போலீஸ் மூலம் அரெஸ்ட் பண்ண வைத்துவிட்டார்.

இதையெல்லாம் தட்டிக் கேட்கும் விதமாக ஜனனி அவர்களுடன் இருந்து போராடுகிறார். கடைசியில் அறிவுகரசி, தர்ஷன் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கினால் நானும் உங்களை இங்கு இருந்து வெளிவிட்டு விடுவேன் என்று டீல் பேசுகிறார். ஜனனி அதெல்லாம் செய்யக்கூடாது என்று மறுத்த நிலையில் ஜட்ஜிடம் இந்த கேஸ் போய்விட்டது. அந்த வகையில் ஜனனி, பார்கவி மூலம் அறிவுக்கரசிக்கு ஆப்பு வைக்கும் விதமாக சில நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார். அதன் மூலம் செய்யும் அராஜகத்திற்கு நிச்சயம் அறிவுக்கரசிக்கு தண்டனை கிடைக்கப் போகிறது.

Leave a Comment