வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜய்யை இயக்கும் அந்த கருப்பு ஆடு யார்? பிஜேபி-யின் B டீம் தான் தளபதி என்று அடித்து சொல்லப்படும் உண்மைகள்

Who is the black sheep directing Vijay: நடிகன் நாடாளக் கூடாது என்பது ஒரு தரப்பினரின் கருத்தாக இருந்தாலும், சமீப காலமாகவே விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்காக தீவிரமாக செயல்படுகிறார். விஜய் மக்கள் இயக்கத்தை ஒரு கட்சியாக மாற்றுகின்றனர். ஆனால் இப்போது விஜய் அரசியலுக்கு வரும் நோக்கம் என்ன தான்? என்பது இப்போது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

இவர் 2024ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அதை தொடர்ந்து 2026ல் சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்டப் போகிறார். மக்களவைத் தேர்தலில் அடுத்த பிரதமர் யார் என்பதுதான் கேள்வி. விஜய் அரசியலுக்கு நுழைந்த உடனே பிரதமராகி விட முடியாது. ஆனால் நரேந்திர மோடி அடுத்த பிரதமரா இல்லையா என்பது தான் கேள்வி.

விஜய் திமுக உடன் கூட்டணி போடவில்லை என்றால், டேஞ்சர் ஆகிவிடும். ஏனென்றால் ஓட்டு பிரிந்துவிடும். அதேசமயம் அதிமுகவிற்கு இது சாதகமாகவும் அமையும். ஒருவேளை அதிமுக வந்தால் பிஜேபிக்கு அது பாசிட்டிவ் ஆக அமையும். எப்படி பார்த்தாலும் விஜய் பாஜகவை எதிர்த்தாலும் பாஜகவின் B டீம்  தான்.

Also Read: விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் இதுதான்.. திராவிடத்தை ஆட்டம் காண வைக்க வரும் தளபதி

விஜய் அரசியலுக்கு வருவதை குறித்து விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர்

அதே பாஜகவிற்கு ஆதரவளித்தாலும் பாஜகவின் B டீம் தான். 2024 தேர்தலில் ஏதோ ஒரு வகையில் பாஜகவிற்கு விஜய் உதவி பண்ணப் போகிறார் என்பதில் மாற்றமில்லை. அப்படி இருக்கும்போது திராவிட அரசியலுக்கும், தமிழ் தேசியத்திற்கும் எதிரானவர் தான் விஜய் என்பது மக்களுக்கு தெரிந்து விடும். ஆக மொத்தத்தில் விஜய் 2024 அரசியலுக்கு வருவது அவருக்கே அவர் வைத்துக் கொள்ளும் ஆப்பு என்று மூத்த பத்திரிகையாளரான பிஸ்மி சமீபத்தை பேட்டியில் அடித்து சொல்கிறார். 

ஆக மொத்தத்தில் விஜய் 2024 தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் ஆக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே விஜய் அரசியலில் களம் காண்கிறார். விஜய் அரசியலுக்கு நுழைந்த உடனேயே அவரை பிரதமராக பார்க்க மாட்டார்கள். அவர் பிரதமர் ஆகுவதற்கான வலிமையும், வல்லமையும் கிடையாது. அவருடைய கட்சியும் அந்த அளவிற்கு வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை.

சொல்லப்போனால் 40 தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் டெபாசிட் கூட வாங்க முடியாது. ஆனால் இதையெல்லாம் தெரிந்தும் விஜய் வருகிறார் என்றால் அவருடைய நோக்கம் என்ன, அவரை இயக்குவது பாஜக தான் என்றும் பிஸ்மி அடித்து சொல்கிறார். விஜய் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் களம் காண்கிறார் என்றால் அது பாஜகவின்  ஆப்ரேஷன் தான். இளம் தலைமுறைகளை சுதாரித்துக் கொள்ளுங்கள் என்றும் பிஸ்மி அலட் கொடுக்கிறார்.  

Also Read: 2 படத்தால் முடிந்த சோலி.. வெங்கட் பிரபுவை விஜய் இழுத்தடித்த காரணம் இதுதான்

Trending News