புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தளபதியின் 19 படத்திற்கு டான்ஸ் மாஸ்டர் ஆன ஒரே பிரபலம்.. 2000 பேருடன் ரணகளம் செய்த விஜய்

Vijay Dance: இந்திய சினிமாவில் அபாரமான நடனத்திறமை மிக்க ஹீரோக்களின் பட்டியலில் விஜய்க்கு முக்கிய இடம் உண்டு. அதுவும் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் விஜய்யின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவருடைய நடன திறமை. அதுதான் இளைஞர்கள் இடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கை உயர்த்தியதுடன் தங்களுடைய தளபதி என காலரை தூக்க வைக்கிறது.

ஆனால் விஜய்யின் 19 படங்களுக்கும் தேசிய விருதைப் பெற்ற ஒரே டான்ஸ் மாஸ்டர் தான் நடன இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். அதிலும் இப்போது விஜய் லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடி’ என்ற பாடல் விஜய்யின் 49வது பிறந்தநாள் அன்று வெளியாகி இணையத்தை ரணகளம் செய்தது.

Also Read: வெங்கட் பிரபு படத்துடன் ஜாலி பண்ண போகும் தளபதி.. உதயநிதியை அப்படியே பின்பற்றும் விஜய்

இதில் இந்தப் பாடலில் விஜய் 2000 டான்சர் உடன் ஆடி மாஸ் காட்டியிருப்பார். இந்தப் பாடலுக்கும் விஜய்யின் 19 படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த தினேஷ் மாஸ்டர் தான் கொரியோகிராபர் ஆக பணி புரிந்திருக்கிறார். இது மட்டுமல்ல அந்த 19 படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது.

2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தில் இடம்பெற்ற ‘சரக்கு வச்சிருக்கேன்’ என்ற பாடலில் துவங்கிய பயணம், அதன் தொடர்ச்சியாக யூத் படத்தில் இடம்பெற்ற ‘அட ஆள்தோட்ட பூபதி நானடா’, பகவதி படத்தில் இடம்பெற்ற போடாங் கோ, கை கை வைக்கவா மற்றும் சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா பாடலுக்கும், வேட்டைக்காரன் படத்தில் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ மற்றும் சுறா படத்தில் ‘தஞ்சாவூர் ஜில்லாகாரி’ மற்றும் தலைவா படத்தில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ போன்ற படங்களுக்கும் தினேஷ் மாஸ்டர் தான் நடனம் அமைத்துக் கொடுத்தார்.

Also Read: விஜய்க்கு டஃப் கொடுக்கும் அர்ஜுனின் லியோ கெட்டப்.. ட்ரெண்டாகி கொண்டிருக்கும் புகைப்படம்

அதுமட்டுமல்ல விஜய் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் சூப்பர் ஹிட் அடித்த இரண்டு பாடல்களான குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் போன்ற போன்ற பாடல்களுக்கும் கடைசியாக இந்த வருடம் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆக இருக்கும் லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடலுக்கும் தினேஷ் மாஸ்டர் தான் நடனம் அமைத்துக் கொடுத்தார்.

இந்த பாடல்கள் அனைத்தும் விஜய்யின் நடனத் திறமையை வெளிக்கொணர்ந்தது மட்டுமல்லாமல் அவரை மற்ற நடிகர்களுடன் வேறுபடுத்தி காட்டிய பாடல்களாகும். இதற்கு தினேஷ் மாஸ்டரும் பெரும் பங்கு வகுத்திருக்கிறார்.

Also Read: வெங்கட் பிரபுவுக்கு சாதகமாய் மாறும் முடிவுகள்.. தளபதி 68க்கு கிடைத்த ஏமாற்றம்

Trending News