புதன்கிழமை, ஜனவரி 22, 2025

Intro உருவாக்கிக் கொடுத்து, வீழ்ந்து கிடந்த அரவிந்த்சாமிக்கு Come Back கொடுத்தது யார் தெரியுமா?

ரஜினியின் தளபதி படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அப்படத்தில் கலெக்டர் வேடத்திலும் அவருக்கு தம்பியாகவும் நடித்திருந்தார். அதன் பின், மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதில், மதுபாலா, ஜனகராஜ், நாசர், பங்கஜ் கபூர் ஆகியோர் நடித்தனர்.

இப்படம் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானும் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அரவிந்த் சாமியின் நடிப்பு பேசப்பட்டது. பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சினிமாவை குறைத்துக் கொண்டு தன் சொந்த தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். மின் மீண்டும் 2005 ல் சாசனம் படத்தில் நடித்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அப்போது, விபத்தில் சிக்கிய அவர் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இதன் அவர் உடல் எடை கூடியது. அவரது தோற்றத்தைப் பார்த்து இது ரோஜா அரவிந்த்சாமியா என கேட்டனர்.

மணித்னம் – அரவிந்த் சாமி கூட்டணி !

அதன்பின், அவரை சினிமாவில் அறிமுகம் செய்த மணிரத்னம் கடல் படத்தின் மூலம் மீண்டும் அரவிந்த் சாமிக்கு கம்பேக் கொடுக்கும் வகையில் ஒரு கேரக்டர் கொடுத்தார். அதற்காக ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைத்துக் காட்டினார்.

சினிமாவில் ரீ எண்ட்ரீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போல் தனி ஒருவன் படத்தில் வில்லன் சித்தார்த் கேரக்டரில் மிரட்டினார். அடுத்தடுத்து, போகன், தலைவி என பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இனி மணிரத்னம் – அரவிந்த் சாமி – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் அடுத்து புதிய பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Trending News