திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

125 கோடி பத்தல, பணத்தாசை யாரை விட்டுச்சு.. ரஜினியின் பாலிசியை கையிலெடுத்த தளபதி விஜய்

மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் தளபதி 67. ஏற்கனவே லோகேஷன் விக்ரம் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதால், அவர் மீது திரையுலகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

அதை நிரூபிக்கும் விதமாக விக்ரம் படத்தை மிஞ்சும் அளவுக்கு தளபதி 67 படத்தின் பிரீ பிஸ்னஸ் படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பூஜை கூட போடல அதுக்குள்ள 400 கோடிக்கு மேல் வியாபாரம் செய்திருக்கிறது என சொல்லப்படுகிறது. ஏற்கனவே தளபதி 67 படத்தின் ஓடிடி உரிமைகள் அதிக விகிதத்தில் நெட் பிலிப்ஸ் நிறுவனத்தால் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

Also Read: அஜித்தை பின்னுக்கு தள்ளி கெத்து காட்டும் விஜய்.. நெட்பிளிக்ஸ் பல கோடிக்கு வியாபாரமான தளபதி 67

இந்நிலையில் தளபதி 67 படத்தில் விஜய் ரஜினிகாந்தின் பார்முலாவை கையில் எடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் ரஜினி கடந்த இரண்டு 20 வருடங்களாக தான் நடிக்கும் படத்தில் சம்பளம் வாங்குவது மட்டுமல்லாமல் படம் எங்கெங்கெல்லாம் ரிலீஸ் ஆகிறதோ அங்கு வரும் லாபத்திலும் ஷேர் வாங்கிக் கொள்வார்.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்கின்ற மாதிரி, ரஜினிக்கு மட்டும் ஒரு படத்தில் சம்பளத்துடன் படத்திற்கு கிடைத்த லாபத்தில் இருந்தும் தனியாக ஷேர் வாங்கிக் கொள்வார். இதேபோன்றுதான் தற்போது விஜயும் முதல் முதலாக தளபதி 67 படத்தில் செய்யப் போகிறார்.

Also Read: விக்ரம் படத்தை மிஞ்சும் பிரமோஷன்.. விரைவில் வெளிவர உள்ள தளபதி 67 டீசர்

அதாவது விஜய், தளபதி 67 படத்தில் சம்பளத்தை தனியாக வாங்கிக் கொண்டு படத்தில் வரும் லாபத்திலும் ஷேர் கேட்டிருக்கிறார். இந்தப் படம் மட்டுமல்ல இனி இவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களிலும் இதையே தான் பின்பற்றப் போகிறார்.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் பணத்தாசை யாரை விட்டது. மார்க்கெட் இருக்கும் வரை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என விஜய் தற்போது ரஜினியின் பாலிசியை கையில் எடுத்து தயாரிப்பாளர்களை திணறடித்துள்ளார்.

Also Read: ரஜினிக்கு வில்லனாக நடித்ததால் அந்தஸ்தை இழந்த நடிகர்.. 183 படம் நடித்தும் ஓரங்கட்டிய தமிழ் சினிமா

Trending News