வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

எங்களை ஏன் இவ்வளவு அவமானப்படுத்துறீங்க, நசுக்குறீங்க.. சரண்யாவால் மேடையில் கதறிய தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்திற்கு கட்சிதமாக பொருந்திய நடிகைகள் பலருண்டு. ஆனால் நடிகை சரண்யா பொன்வண்ணனின் அம்மா நடிப்பிற்கு என பல ரசிகர்கள் உண்டு. காமெடியாகவும், செண்டிமெண்ட் காட்சிகள், அழுகை என அனைத்திலும் அம்மாவாகவே மாறியிருப்பார் சரண்யா பொன்வண்ணன். இவர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் செண்டிமெண்ட் அம்மாவாக நடித்திருப்பார்.

இவரின் நடிப்பிற்காக சிறந்த துணை நடிகை என்ற தேசிய விருது கிடைத்தது. அதன் பின்பு தனுஷின் வேலையில்லா பட்டதாரி, உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடி, அஜித்தின் கிரீடம், சமீபத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தான் உள்ளிட்ட பல படங்களில் அம்மாவாக நடித்துள்ளார். இதனிடையே ஒரு புது பட தயாரிப்பாளர் எடுத்த படத்திற்கு சரண்யா பொன்வண்ணன் கமிட்டாகி அம்மாவாக நடித்துள்ளார்.

Also Read: நயன்தாராவின் ரகசியத்தை உடைத்த சரண்யா பொன்வண்ணன்.. லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இதுதான் நிலைமை

அந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடந்த நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் சரண்யா பொன்வண்ணனின் தவறை சுட்டிக்காட்டி மேடையில் பேசினார். இந்த படத்தின் கதையே சரண்யா பொன்வண்ணனை வைத்து தான் கதை நகரும். அவ்வளவு முக்கியத்துவம் அவருக்கு கொடுத்திருந்தபோது படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு கூட வராமல் இருப்பது சரியானதல்ல என தெரிவித்தார்.

காலில் விழுந்து கும்பிடுமளவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு சரண்யாவை தான் அழைத்ததாக தெரிவித்தார். அதற்கு அவர் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி உள்ளது, ஆகையால் தன்னால் வர முடியாது என அசால்டாக தெரிவித்தாராம். இதுவே சூர்யா, தனுஷின் திரைப்படங்களின் ப்ரோமோஷன்களுக்கு செல்லாமல் இப்படி ஒரு சாக்கை கூறியிருப்பாரா என சரமாரியாக கேள்விக் கேட்டார்.

Also Read: சரண்யா அம்மாவாக நடித்து வசூல் சாதனை படைத்த 5 படங்கள்.. இவங்க நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்! 

அப்போதென்றால் என்னைப்போல புது படங்களை எடுக்க வரும் புதுமுக தயாரிப்பாளர்களுக்கு மரியாதை இவ்வளவு தானா, ஏன் நாங்கலெல்லாம் மேல வரக்கூடாதா, சினிமா தான் கதி என தெரிந்து இதே மண்ணில் பிறந்து, வளர்ந்து, சினிமாவுக்காக வாழ நினைக்கிறோம். ஆனால் எங்களை போல் புதுமுகங்களை பெரிய நடிகர்கள் பொருட்டாக கூட நினைக்காதது தனக்கு வேதனையளிப்பதாக தெரிவித்தார்.

என் என்னை போல இருக்கும் சிறுப்பட தயாரிப்பாளர்களை இப்படி கேவலமாக பார்க்குறீர்கள். எவ்வளவு தான் நசுக்குறீர்கள் என கண்ணீர் மல்க கேள்விக்கேட்டு புதுமுக தயாரிப்பளார் சரண்யா பொன்வண்ணனை வெளுத்து வாங்கினார். இவரது பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சரண்யா பொன்வண்ணனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.

Also Read: நடந்து முடிந்த சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்.. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த செம கிப்ட்!

Trending News