ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தொடர்ந்து 5 தோல்வி படங்கள்.. விஜய் ஆண்டனி கோட்டை விடுவது கதையிலா? நடிப்பிலா?

Vijay Antony: சினிமாவில் காமெடி நடிகர்களாக இருந்து முன்னணி ஹீரோக்களாக பலரும் மாறியுள்ளனர். அந்த வகையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் மாறினர். இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக சினிமா விமர்சகர் கருத்துக் கூறியுள்ளார். இதுகுறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன.

விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியால் சலீம் படத்திலும் நடித்தார். ஆனால் அவருக்கு ரொமான்ஸ் செய்ய தெரியவில்லை என்று விமர்சனம் முன்வைத்தனர். அதன்பின்னர், விமர்சனங்களுக்குப் பதிலடியாக சசி இயக்கத்தில் ‘பிச்சைக்காரன் 1′ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகள் பெற்றது. அதன்பின்னர், சைத்தான், எமன், அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. கடந்த ஆண்டு வெளியான’ பிச்சைக்காரன் 2′ படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ரத்தம்’, ‘கொலை’, ‘ரோமியோ’, ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்கள் தோல்விப்படங்களாக அமைந்த நிலையில், கடந்த வாரம் வெளியான ‘ஹிட்லர்’ படமும் போதிய வரவேற்பை பெறாமல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், விஜய் ஆண்டனி மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

குறிப்பாக, விஜய் ஆண்டனின் படங்கள் தொடர் தோல்வியடைவதற்கு அவர் தேர்வு செய்யும் படங்களின் கதையா? இல்லை அவருக்கு நடிக்கத் தெரியாமல் இருப்பதா என்று பிரபல சினிமா விமர்சகர் புளூ சட்டைமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு கதையில் எந்த ஹீரோ நடித்தாலும் படம் ஹிட்டாகி வரவேற்பை பெறும் என்ற நிலையில் பல கோடிகள் பணம் போட்டு படம் எடுத்தும் இப்படங்கள் தோல்விப் படமாவது ஏன் என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது.

மேலும், விஜய் ஆண்டனி இசையமைத்த வரைக்கும் அவர் பாடல்கள் இன்றைக்கும் ஆல்பம் ஹிட்டாக இருக்கிறது. அதிலும் விஜய்- விஜய் ஆண்டனி காம்போ என்றாலும் பக்கா மாஸ். அப்படியிருக்க இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் அதில் சாதனைகள் படைக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

ஆனால், விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் நன்றாகத்தான் உள்ளன. அவரது படங்களில் நல்ல அம்சங்கள் ஏதாவது இருக்கத்தான் செய்கிறது. அவர் வித்தியாசமான கதைகளில் படங்கள் நடிக்க முயற்சிக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Trending News