புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கேப்டனின் இறுதி சடங்கில் மனைவி எடுத்த சபதம்.. பதவி வெறி யாரை விட்டுச்சு, அனுதாப ஓட்டு தேடும் குடும்பம்

Vijaykanth Wife’s Vow at Captain’s Funeral: மனதில் பட்டதை எதார்த்தமாகவும், துணிச்சலாகவும் பேசக் கூடியவர் விஜயகாந்த். தற்போது இவருடைய பிரிவை தாங்க முடியாமல் தமிழக மக்கள் துவண்டு போய் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்ல வார்த்தை வரவில்லை, மனிதனாக வாழ்ந்து தெய்வமாக மக்கள் மனதில் அணையாத விளக்காக என்றும் மனதில் கேப்டன் விஜயகாந்த் இருப்பார். அப்படிப்பட்ட இவருடைய இறுதி மரியாதை நேற்று முடிந்து விட்டது.

இந்த நிலையில் இறுதி சடங்கு செய்த கையோடு கேப்டனின் மனைவி பேசிய விஷயம் தான் தற்போது இன்னும் நெஞ்சை பதற வைக்கிறது. அதாவது கடந்த ஏழு வருட காலமாக விஜயகாந்த் உடல்நிலை குறைவால் இருந்த பொழுது பக்கபலமாக இருந்து பார்த்துக் கொண்டது இவருடைய குடும்பம் தான். ஆனால் நேற்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இறுதி சடங்கு முடித்துவிட்டு பதவி ஆசையில் அரசியல்வாதியாக பேசி சபதம் போட்டிருக்கிறார்.

அதாவது இவர் பேசியதை பார்க்கும் பொழுது பதவி வெறி பிடித்து ஆட்சியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே தான் இருந்தது. விஜயகாந்தின் கட்சியை நிறுத்தி காட்ட வேண்டும் என்பதையும் தாண்டி இவருக்கு பதவி மேல் இருந்த ஆசைதான் இந்த அளவுக்கு பேச வைத்திருக்கிறது.

Also read: கேப்டனை பார்க்க தவியாய் தவித்த விஜய்.. விஜயகாந்தை தனிமைப்படுத்தி கண்ட்ரோலில் வைத்திருந்த குடும்பம்

வருகிற எலக்சனை மனதில் வைத்து ஓட்டை பிச்சை கேட்பது போல் கேப்டனின் தொண்டர்கள் அனைவருக்கும் பாதம் வணங்கி கேட்டுக்கொள்கிறேன். கேப்டனின் கனவை நிறைவேற்றும் விதமாக நாம் அனைவரும் சேர்ந்து கட்சியை ஜெயிக்க வைக்க வேண்டும். அதை அவருடைய சமாதியில் நிலைநிறுத்திக் காட்டினால் மட்டுமே அவர் ஆத்மா சாந்தியடையும் என்று அனுதாப ஓட்டை கேட்டுக்கொண்டார்.

முக்கியமாக இவர் நினைப்பது என்னவென்றால் இன்னும் கொஞ்ச நாளில் எலெக்ஷன் வந்து விடும். அதனால் கேப்டனின் மறைவை நினைவுப்படுத்தி மக்களிடம் ஓட்டு கேட்டு ஆட்சியைப் பிடித்து விட வேண்டும். அதன் மூலம் பதவியில் இருந்து அதிகாரம் பண்ண வேண்டும். அத்துடன் தன்னுடைய சங்கதியாக இருக்கும் மகன்களுக்கும் சீட்டு வேணும்.

இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு விஜயகாந்தின் இறுதி சடங்கை முடித்த கையோடு சபதம் போடும் அளவிற்கு பதவி வெறிபிடித்து பேசி இருக்கிறார். அத்துடன் விஜயகாந்தின் இறுதி மரியாதையை செலுத்துவதற்கு கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் வந்திருக்கிறார்கள். தற்போது இவர்கள் முன்னணியில் விஜய்காந்தின் கனவைப் பற்றி பேசினால் அதன் மூலம் ஓட்டு பெற்று ஜெயித்து விடலாம் என்ற அல்ப ஆசையில் மொத்த குடும்பமும் களமிறங்கி விட்டார்கள்.

Also read: கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்த 15 பிரபலங்கள்.. உயிர் நண்பனை பிரிந்து தவிக்கும் ரஜினி

Trending News