வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சோசியல் மீடியாவிற்கு தீனி போடும் விக்னேஷ் சிவன்.. மெச்சுருட்டியே இல்லாமல் பண்ணும் வேலை

கடந்த சில வாரங்களாகவே விக்னேஷ் சிவன், நயன்தாரா பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவில் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதிலும் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களான இவர்கள் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஏற்கனவே நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லாதவர் என்ற ஒரு செய்தி அவரின் திருமணத்திற்கு முன்பே பரவியது. மேலும் அதற்கான சிகிச்சையிலும் அவர் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென்று இரு குழந்தைகளுக்கு அம்மாவாகி விட்டேன் என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also read:வாடகத்தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. நயன்தாரா, விக்னேஷ் சிவன் கொடுத்த ஷாக் தகவல்

மேலும் அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விஷயமும் கசிந்தது. அதன் பிறகு அதில் இருக்கும் சட்ட திட்டங்களை பெற்று எல்லாம் ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறி வந்தனர். அது மட்டும் இல்லாமல் விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் சட்டத்தை மீறியதாகவும், விசாரணைக்க உட்படுத்த போவதாகவும் கூறப்பட்டது.

vignesh-sivan
vignesh-sivan

இந்நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற இவர்கள் இருவரும் தற்போது தமிழக அரசிற்கு அதற்கான விளக்கத்தையும், ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளனர். அதில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் குழந்தை பிறந்ததாகவும், ஆறு வருடங்களுக்கு முன்பே அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Also read:நயன்தாராவின் குழந்தையை சுமந்த தாய் யார் தெரியுமா.? உச்சகட்ட அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்

இப்படி இவர்களைச் சுற்றி ஒரு பிரச்சனை சூழ்ந்து இருக்க மறுபக்கம் தங்கள் குழந்தைகளுடன் இவர்கள் என்ஜாய் செய்து வருகின்றனர். அந்த வகையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதில் அவர் கனவு நனவாகிவிட்டது என்ற வார்த்தைகளுடன் தன் மகன் மடிமீது உச்சா போன போட்டோவையும் போட்டு இருக்கிறார். அந்த போட்டோ தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் இதற்கெல்லாமா சந்தோஷப்பட்டு போட்டோ போடுவீங்க என்று அவரை கலாய்த்து வருகின்றனர்.

Also read:லேடி சூப்பர் ஸ்டார் புருஷனா சும்மாவா.. நயன்தாராவால் படாத பாடுபடும் விக்னேஷ் சிவன்

Trending News