வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு ரெடியான வைல்ட் கார்ட் என்ட்ரி.. அசத்தலாக வெளிவந்த ஷூட்டிங் புகைப்படம்

டிஸ்னி பிளஸ் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டு நாள்தோறும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் சுவாரசியமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்னும் ஒருசில போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்க உள்ளனர். ஆகையால் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளார்.

எனவே அவர் ஏற்கனவே 14 போட்டியாளர்களுடன் வீட்டிற்குள் வரவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சில உடல்நிலை குறைபாடுகளால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொடக்கத்திலிருந்தே கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதாம்.

தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லாததால் ஓவியா பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு செல்ல ரெடியாகி விட்டார். அத்துடன் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கவிருக்கும் ஓவியாவின் புரோமோஷன் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் நுழைய ஓவியா தயாராகிவிட்டார்.

oviya-bb-cinemapettai
oviya-bb-cinemapettai

என்னதான் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா செய்த க்யூட்டான செய்கைகளும் நேர்மையான குணத்தினாலும் எக்கச்சக்கமான ரசிகர்களை மயக்கி விட்டார். அதன் காரணமாகவே இவருக்கு சோஷியல் மீடியாவில் தனி ஆர்மியே துவங்கும் அளவுக்கு தீவிர ரசிகர்கள் கிடைத்தனர்.

வரும் வாரத்தில் ஓவியா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மாஸ் என்ட்ரி கொடுக்க உள்ளார். எனவே தற்போது மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் ஓவியாவை அவருடைய ரசிகர்கள் பார்ப்பதற்கு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Trending News