சனிக்கிழமை, அக்டோபர் 26, 2024

10 ரூ. நாணயங்கள் செல்லுமா? செல்லாதா? RBI சொல்லியும் வாங்க மறுப்பது ஏன்? தெளிவான விளக்கம்

இந்திய அரசு வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்கள் பற்றிய வதந்திகள் பரவி வரும் நிலையில் ரிவர்வ் வங்கி தெளிவான விளக்கம் அளித்துள்ளது அதுபற்றி இக்கட்டுரையில் தெளிவாகப் பார்க்கலாம்.

10 ரூபாய் நாணயம்!

இந்திய அரசு பணம் மற்றும் நாணயங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய ரூபா ய்நாணயங்களில் 1 ரூபாய், 2 ரூபாய், ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் அதிகம் இருக்கும் நிலையில், 10 ரூபாய் நோட்டுகள் அதிகம் கசங்கியும், கிழிந்தும் காணப்பட்டதால், இதைத் தவிர்க்க, கடந்த 2009 ஆம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.

அதிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 14 முறை தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களை ரிவர்வ் வங்கி வெளியிட்டு இந்த நாணயமும் இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட நாணயங்களும் நாட்டில் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கது என தெளிவுபடுத்தியது.

இந்த 10 ரூபாய் நாணயத்தில் செப்பு, அலுமினியம் 6 சதவீதமும், நிக்கல் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. தற்போது புழக்கத்தில் உள்ள இது 14 வெவ்வேறு வடிவமைப்புகளில் பல நாணயங்கள் இருந்தாலும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜீலையில் சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியால் இந்தியாவில் உள்ள சில கடைக்காரர்கள் 10 ரூபாய் நாணயங்களை ஏற்க மறுத்துவிட்டனர்.

10 rupees-coin

கடைகளில் மட்டுமல்லாது, பேருந்துகளிலும் இதேபோன்றே யாரும் 10 ரூபாய் காயினை வாங்க மறுத்ததால் பலரும் கையில் அதை வைத்துக் கொண்டு அலைந்து வந்தனர். குறிப்பாக 20 வரி வடிவமைப்பில் உள்ள நாணயங்கள்தான் உண்மையானது எனவும், 14 வரி அமைப்பில் உள்ளவை போலியானது என சிலர் வதந்தியைப் பரப்பியதை பலரும் நம்பியதால் மக்கள் இதை வாங்க மறுத்தனர். இன்னும் சில இடங்களில் சந்தேகம் நீடித்து, இதே மாதிரி நடந்து வருதாகத் தகவல் வெளியாகிறது.

வதந்திகளுக்கு எதிராக அரசும், ரிசர்வ் வங்கியும் விழிப்புணர்வு

இந்த நிலையில் இந்திய ரிவர்வ் வங்கியின் அறிக்கையின்படி, எல்லா வடிவங்களில் உள்ள 10 ரூபாய் நாணயங்களும், இந்திய அரசால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுவதாகவும், அவை எந்த வடிவமைப்பில் இருந்தாலும் ஒவ்வொரு வடிவமைப்பில் உள்ள 10 ரூபாய் நாணயங்களும் ஒரே மதிப்பிலானவை என்று தெரிவித்தது.

இந்த நிலையில், 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும் அதை ஏற்க மறுத்து வதந்திகள் பரவிய நிலையில், 10 ரூபாய் நாணயங்களை பரிவர்த்தன செய்ய ஏற்க மறுக்கும் நபர்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, 10 ரூபாய் நாணயங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு 1440 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருவதும், யாரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அரசும், ரிசர்வ் வங்கியும் என்ன சொன்னாலும் சிலர் இந்த 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து வருகின்றனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்காமல் அதற்கு பதிலாக 10 ரூபாய் நோட்டுகளை வாங்கி வருவதால் விஜயவாடாவில் உள்ள வங்கியில் மட்டும் ரூ. 12 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்கள் குவிந்து கிடப்பதாத தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News