
Ajith: அஜித்தின் குட் பேட் அக்லி படம் வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. விடாமுயற்சி தான் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்த படம் வெற்றி கொடுக்கும் என அஜித் ரசிகர்கள் நம்புகின்றனர்.
அதற்கு அடுத்தபடியாக தனுஷின் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள செய்தி தான் இப்போது அதிகம் பரவி வருகிறது. மேலும் தனுஷ் அஜித்திடம் இதற்கான கதையையும் கூறி இருக்கிறார்.
கார் ரேஸில் இருக்கும் அஜித் ஏப்ரல் மாதம் சென்னை வந்த பிறகு தனுஷின் படம் உறுதியாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஒரு பெரிய ஆசை இருக்கிறது. பொதுவாகவே சமீபகாலமாக கேமியோ ரோலில் பிரபலங்கள் நடித்து வருவது அதிகமாகி வருகிறது.
ஒரே காட்சியில் அஜித், தனுஷ் வருவார்களா?
அந்த வகையில் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அதேபோல் தனுஷ், அஜித் கூட்டணியில் உருவாகும் படத்திலும் தனுஷ் ஒரிரு காட்சியில் வந்தால் நன்றாக இருக்கும் என்று ஏகே கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் தனுஷ் கூறுகையில் இந்த படத்தில் நான் ஒரு காட்சியில் கூட வரமாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டாராம். மேலும் கதைக்கும் அது தேவைப்படாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.
ஒரே திரையில் அஜித் மற்றும் தனுஷ் இருவரையும் பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் அஜித்தின் ஆசை அடுத்தடுத்த படங்களில் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது.