Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வாயை பிளக்கும் அஜித்தின் சம்பளம்.. சரிப்பட்டு வருவாரா?

வாயை பிளக்கும் அஜித்தின் சம்பளம்.. சரிப்பட்டு வருவாரா?

Ajith : இன்றைய காலகட்டத்தில் எந்தவிதமான மேக்கப்பும் இல்லாமல் தனது இயற்கையான தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒரே தமிழ் நடிகர் அஜித் மட்டும் தான். வெற்றியை கண்ட தல: விடாமுயற்சி திரைப்படம் அஜித்துக்கு தோல்வியை கொடுத்திருந்தாலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய […]

Ajith : இன்றைய காலகட்டத்தில் எந்தவிதமான மேக்கப்பும் இல்லாமல் தனது இயற்கையான தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒரே தமிழ் நடிகர் அஜித் மட்டும் தான்.

வெற்றியை கண்ட தல:

விடாமுயற்சி திரைப்படம் அஜித்துக்கு தோல்வியை கொடுத்திருந்தாலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படம் அதுவும் மீண்டும் த்ரிஷாவுடன் இணைந்த தல அஜித்துக்கு நல்ல வெற்றியை கொடுத்தது.

பல வெற்றி படங்களை கண்ட அஜித், முதன்முதலாக புதிய இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனை நம்பி நடித்தார். அந்த நம்பிக்கை அஜித்துக்கு வீண்போகாமல் படம் பல கோடி வசூலை ஈட்டித் தந்தது.

மீண்டும் இணைந்த கூட்டணி!

இதைத்தொடர்ந்து தல அஜித்தின் 64வது படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்பது சினிமா வட்டாரத்தில் இப்போது பேசும் பொருளாக மாறிவிட்டது.

ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் படமே 212 கோடி வசூலை ஈட்டி தந்ததால் மீண்டும் தலையை வைத்து படம் எடுத்தால் இவருக்கு நல்ல லாபம் கிடைக்கும் என மற்ற இயக்குனர்கள் இவருடன் போட்டி போட தொடங்கியுள்ளனர்.

இவ்வளவு சம்பளமா?

இந்நிலையில் அஜித் நடித்து ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கும் AK64 திரைப்படத்தின் பட்ஜெட் மட்டுமே 274 கோடியாகும். இதில் அஜித்தின் சம்பளம் மட்டும் 180 கோடி.

படத்தின் அப்டேட்டை கேட்ட ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் கூட்டணி நிச்சயம் ஒரு நல்ல கதைக்களத்தை உருவாக்கும் என ரசிகர்கள் வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.