Singappenne : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே தொடர் விறுவிறுப்பான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. தன் குழந்தையின் அப்பா யார் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் ஆனந்தி.
டாக்டரும் பல நாட்கள் இதை மறைத்து வைக்க முடியாது உன் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை கண்டுபிடித்தாயா என்று கேட்கிறார். யாருன்னு தெரிஞ்சா தானே கண்டு பிடிக்கிறதுக்கு என ஆனந்தி புலம்புகிறார்.
இந்த நேரம் பார்த்து ஆனந்தியின் அப்பா, அம்மா இருவரும் அவர் தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு வந்து விடுகிறார்கள். தனது அம்மாவை பார்த்து உணர்ச்சி பொங்க ஆனந்தி அழுகிறார்.
மித்ராவின் சூழ்ச்சி வலையில் ஆனந்தி மாட்டுவாரா.?
மேலும் தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று ஆனந்தி முயற்சி எடுக்கப் போகிறார். ஆனால் தற்போது ஆனந்தியின் கர்ப்பம் மித்ராவுக்கு தெரிந்ததால் சூழ்ச்சி செய்ய இருக்கிறார்.
ஏனென்றால் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணம் மகேஷ் என்பது தற்போது மித்ராவுக்கு மட்டும்தான் தெரியும். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் மகேஷ் மற்றும் ஆனந்திக்கு திருமணம் நடந்து விடும் என்ற பயத்தில் மித்ரா உள்ளார்.
ஆகையால் மிக விரைவில் அன்பு மற்றும் ஆனந்தி இருவருக்கும் கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார். இதற்கு ஆனந்தி சமாதிப்பாரா என்பது கேள்விக்குறி தான். மேலும் மித்ராவின் சூழ்ச்சியால் இவர்களது திருமணம் நடக்குமா என்று சூடு பிடிக்கும் கதைகளைத்துடன் சிங்க பெண்ணே தொடர் ஒளிபரப்பாகிறது.