சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன்,பாக்ஸ் ஆபீஸிலும் பல சாதனைகளை நிகழ்த்தியது.இதனால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘ஜெயிலர் 2’படமும் உலகளவில் 850 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்நிலையில்,‘ஜெயிலர்’படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் ‘ஜெயிலர் 3’படம் எப்போது தொடங்கும்?என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.ரஜினிகாந்தின் ஸ்டைலும்,நெல்சனின் தனித்துவமான திரைக்கதையும் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதற்கிடையில்,ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் புதிய படத்தின் பணிகளிலும் நெல்சன் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 3’படத்தை 2029-ம் ஆண்டில் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ‘ஜெயிலர்’மூன்றாம் பாகத்தின் தொடக்கம் குறித்த தகவல்கள் வெளியாகி வந்தாலும்,எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
46 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணையும் RK-HKஎன்னும் பெயரிடப்படாத படத்திற்குப் பிறகு நெல்சன் மீண்டும் ‘ஜெயிலர்’உலகத்திற்குத் திரும்புவாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.




