Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவை பொறுத்தவரை அந்த வீட்டில் முத்து வேண்டாதவர் தான். அதனால் முத்துவை கல்யாணம் பண்ணிட்டு வந்த மீனாவும் ஒரு வேலைக்காரி மாதிரி தான் நடத்துகிறார். விஜயா உடன் சேர்ந்து மனோஜ் மற்றும் ரோகினியும் மீனாவை ஒரு எடுபுடியாக பயன்படுத்துகிறார்.
அதற்கேற்ற மாதிரி மீனாவும் எனக்கு வேலை பார்ப்பதில் எந்தவித கஷ்டமும் இல்லை என்ற அனைவருக்கும் சமைத்து போடும் சமையல்காரியாக தியாகி மாதிரி சீன் போடுகிறார். தற்போது மீனாவிற்கு உடம்பு சரியில்லை என்றதும் முத்து, மனோஜ் ரூமில் மீனாவை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு மாத்திரை வாங்க போகிறார். அப்பொழுது மனோஜ் வந்து பார்த்ததும் கட்டிலில் மீனா தூங்கிக் கொண்டிருக்கிறார்.
முத்து செய்த நல்ல காரியம்
உடனே மனோஜ், விஜயாவிடம் என்னுடைய ரூமில் அவ வந்து படுத்து இருக்கிறார் என்று சொல்கிறார். அதற்கு விஜயா கோபமாக மீனாவை எழுப்பி கையைப் பிடித்து தரதரவென்று வெளியே இழுத்து கூட்டிட்டு வருகிறார். அந்த நேரத்தில் மீனா உடம்பு சரி இல்லை அதனால் தான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தேன் என்று சொல்கிறார். ஆனால் அது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத விஜயா, மீனா கையைப் பிடித்து இழுத்துட்டு வருகிறார்.
இதை முத்து பார்த்து ரொம்பவே வருத்தத்தில் நிற்கிறார். இதுதான் சான்ஸ் என்று ரோகிணியும் வேலை செஞ்சிட்டு வீட்டிற்கு சோர்வாக வந்தால் என்னால் படுக்க கூட முடியவில்லை என்று கொளுத்தி போடுகிறார். அதற்கு முத்து மீனாவிற்கு உடம்பு சரியில்லை என்பதால் நான் தான் அங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ என்று சொன்னேன் என்ன பதில் கூறுகிறார்.
அதற்கு விஜயா என் வெளியிலே படுத்து ரெஸ்ட் எடுக்க முடியாதா என்று வக்கிர புத்தியுடன் பேசுகிறார். இதை பார்த்த அண்ணாமலை மாத்திரை போட்டு என்னுடைய அறையில் தூங்கிக்கொள் என்று மீனாவை அனுப்பி வைக்கிறார். பிறகு மாத்திரை போட்டதும் மீனா நன்றாக தூங்கி விடுகிறார். இதனால் காலையில் எழுந்திருக்கும் போது கொஞ்சம் நேரம் ஆகிவிடுகிறது.
பதற்றத்துடன் எழுந்து வெளியே வந்த மீனாவிடம் விஜயா எல்லாரும் ஆபீஸ்க்கு போகணும் தெரியுமில்ல. காலையிலேயே எழுந்து சமைக்க முடியாதா என்று கோவமாக திட்டுகிறார். அப்பொழுது அடுப்பாங்கரையில் இருந்து வெளியே வந்த முத்து இனி யாருக்கு தேவையோ அவர்களை சமைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மீனா இனி யாருக்காகவும் சமைக்க மாட்டாள்.
அப்பாக்கு என்ன வேண்டுமோ அதை நாங்கள் பார்த்து சமைத்துக் கொடுக்கிறோம். மற்றவர்களுக்கு எது வேண்டுமானாலும் இனி அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முத்து கரராக சொல்லி விடுகிறார். இதை கேட்ட விஜயா அதிர்ச்சியாகி நிற்கிறார். இதை தான் எதிர்பார்த்தோம் இத்தனை நாளாக என்று சொல்வதற்கு ஏற்ப விஜயா மூஞ்சியில் முத்துக் கரியை பூசி விட்டார்.
ஆனால் இதை மீனா ஒழுங்காக கடைபிடித்தால் மட்டும்தான் மீனா முத்துவிற்கு கிடைக்கும் மரியாதை தானாக கிடைக்கும். ஆனால் அதை விட்டுவிட்டு சமைப்பதில் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று தியாகம் மாதிரி பேசிக்கிட்டு வந்தால் அந்த வீட்டு சம்பளம் இல்லாமல் வேலைக்காரியாக கடைசிவரை மீனா இருப்பார். இதனை தொடர்ந்து மீனா அந்த வீட்டிற்கு முதல் வாரிசு கொடுக்கும் விதமாக கர்ப்பமாக போகிறார்.
மீனா கர்ப்பம் என்று விஜயாக்கு தெரிந்ததும் பாட்டி என்கிற பாசத்தை காட்டும் விதமாக மீனாவை நல்லபடியாக பார்த்துக்கொள்வார். அத்துடன் விஜயாவிடம் பல மாற்றங்கள் ஏற்படப் போகிறது. மீனா கர்ப்பம் ஆகிவிட்டால் இனி வீட்டு வேலைகளை பார்க்கும் பொறுப்பை ரோகினி இடம் ஒப்படைக்க போகிறார்.
அது மட்டும் இல்லாமல் மீனாவிற்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்யும் பணிவிடையும் ரோகிணி தான் பார்க்கப் போகிறார். பொய்ப்பித்தலாட்டம் பண்ணிய ரோகிணி இப்போதைக்கு மாட்டவில்லை என்றாலும் மீனாவிற்கு வேலை பார்க்கும் ஒரு எடுப்படியாகவும், ரோகிணியை ஆட்டிப்படைக்கும் ஒரு மாமியார் கேரக்டராக விஜயாவை மாற்றி காட்டினால் இந்த நாடகம் இன்னும் சூடு பிடிக்கும்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் சமீபத்திய கதைகள்
- முத்துவிடம் சிக்க போகும் ரோகினி.. மனோஜை நம்பி ஓவராக ஆட்டம் போடும் விஜயா
- Sirakadikkum Asai: அண்ணாமலைக்கு பாட்டி கொடுத்த ஐடியா.. வைத்தெரிச்சலில் விஜயா, தோற்கப் போகும் மருமகள்
- சிறகடிக்கும் ஆசை வில்லி ரோகினிக்கு இவ்வளவு பெரிய பையனா.? இன்ஸ்டாவில் வெளியான புகைப்படங்கள்