வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆஸ்கர் விருதுக்கு ஆசை படும் ராஜமௌலி.. திட்டம் போட்டு பல கோடிகளை வாரி இறைக்கும் படக்குழு

சினிமாவில் நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் தான் இயக்குனர் ராஜமெளலி. இவரது படங்களுக்கும் தெலுங்கில் மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் தற்போது இவர் இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து, பாக்ஸ் ஆபீஸில் 1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்காக தேர்வு செய்யப்படாத நிலையில் தற்போது நேரடியாக அந்தப் போட்டியின் மோதப் போகிறது.

Also Read: RRR படத்தில் நடந்த அதிரடி மாற்றம்.. அப்செட்டில் ரசிகர்கள்

இதற்கெல்லாம் முக்கிய காரணம் ராஜமௌலி தான். ஆர்ஆர்ஆர் படத்தை எப்படியாவது ஆஸ்கர் விருது வாங்க வைப்பதற்காக அமெரிக்கா சென்ற ராஜமௌலி அந்தப் படத்தில் சில சிறப்பு காட்சிகளை கடந்த சில வாரங்களாக பிரபலப்படுத்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி ஆர்ஆர்ஆர் படத்தைப்பற்றி ஆஸ்கார் குழுவுக்கும் அமெரிக்க ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தி பல்வேறு விதமான ப்ரமோஷன் வேலைகளை அங்கிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: ராஜமௌலி படத்தில் இணைந்த அனிருத்.. போடு, வெறித்தனம்!

இதற்காகவே ராஜமௌலி அவருடைய சொந்தப் பணத்தை ரூபாய் 50 கோடியை செலவிட்டு எப்படியாவது ஆஸ்கர் விருதை வாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கான அத்தனை செலவையும் ராஜமௌலியை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிகிறது.

மேலும் பாகுபலி 1, 2 மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற 3 படங்களின் மூலம் ராஜமௌலிக்கு 300 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. ஆகையால் ஆர்ஆர்ஆர் படத்திற்காக ஒரு சில ஆஸ்கர் விருதுகள் கிடைத்தால் சர்வதேச அளவில் ராஜமௌலியின் மார்க்கெட் டாப் கியரில் எகிறி விடும். எப்படியாவது  ஆஸ்கர் விருதை தட்டி தூக்க வேண்டும் என்று இயக்குனர் ராஜமௌலி அமெரிக்காவில் தங்கி பல வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: மாஸ் நடிகருடன் இணையும் ராஜமௌலி.. கண்ணு முன்னாடி வந்துபோகும் பிரம்மாண்டம்.. சூப்பர் அப்டேட்

Trending News