தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்த விஜய், அக்கட்சியின் முதல் மாநாட்டை இந்தியளவில் பேசும் அளவில் நடத்தினார். அதன் மூலம் தன் செல்வாக்கையும், தொண்டர்களின் பலத்தையும் நிரூபித்தார்.
இது அரசியலில் பேசுபொருளானதை அடுத்து, தவெக மாநாட்டுக்கு சென்னையில் இருந்து மக்களை அழைத்துப் போனவர்கள், அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பற்றி உளவுத்துறை தகவல் சேகரித்ததாக தகவல் வெளியானது.
தொடர்ந்து விசிகவின் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது பற்றி அதே விழாவில் விஜய், திமுகவை சீண்டும் வகையில் பேசியிருந்தார்.
இதற்கு உதயநிதி கூறிய கருத்தும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. திமுகவினரும் தொடர்ந்து, விஜய் – த்ரிஷா விமானத்தில் ஒன்றாகப் பயணித்து பற்றியும், விமர்சித்து வருகின்றனர். இவ்விவகரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வலைபேச்சு பிஸ்மி யூடியூப்புக்கு அளித்த பேட்டியில், உதயநிதியையும் பிரபல நடிகையையும் இணைந்து பேசப்பட்ட கிசுகிசு திரையுலகில இருக்கு. அதேபோல் நயன்தாராவையும் அவரையும் இணைத்துப் பேசப்பட்ட காஸிப் இருக்கு.
திமுகவைப் பற்றி விஜய்க்கு தெரியும்
இந்த மாதிரி தவெக நிர்வாகிகள் யாராவது அவரைப் பற்றிப் பேசுனால் திமுகவினர் ஒத்துக் கொள்வரா? எந்த அளவுக்கு கொந்தளிப்பர்? அந்த தவறை திமுகவினரே இப்போது செய்து வருகின்றனர்.
திமுக இந்த மாதிரி தரக்குறைவாகப் பேசுவது அவர்களின் அணுகுமுறையாக உள்ளது. அக்கட்சியின் விழாவிலேயே இப்படி பேசியது நடந்துள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடையில் இப்படித்தான் உள்ளது.
கொள்கை பற்றி, கட்சி பற்றி பேசலாம், அதுதான் ஆரோக்கியமான அரசியல். இப்படி நடக்கும் என்று திமுகவைப் பற்றி விஜய்க்கு தெரியும். அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று விஜய்யே சொன்னதாக தெரிவித்தார்.
மேலும், கீர்த்தி சுரேஷின் கல்யாணத்துக்கு ஏன் விஜய் போனார்? என்று விமர்சிப்பதைவிட, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு வரவழைத்து ஏன் உதவிகள் செய்தார் என்று கேள்வி கேட்கலாம் என்று கூறியுள்ளார்.