வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அண்ணியை அவமதித்த மாமனார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இணையுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்பதை உடைத்து இப்பொழுது தனித்தனி குடும்பமாக பிரிந்து போய்விட்டார்கள். அமைதிக்கு பின் புயல் வீசும் என்பதற்கு போல் இவ்வளவு நாள் அமைதியாக தாக்குப் பிடித்துக் கொண்டிருந்த ஜீவா எரிமலையாக எல்லா கோபத்தையும் கொட்டி தீர்த்ததில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்து விட்டார்கள்.

இப்பொழுது மூர்த்தி கதிர் மட்டும் சேர்ந்து இருக்கிறார்கள். ஆனாலும் இந்த வீட்டை இப்படி பார்ப்பதற்கு என்னமோ போல் இருக்கிறது. இது நாடகமாக இருந்தாலும் இவர்கள் ஒன்றாக இருந்ததை பார்த்துவிட்டு இப்பொழுது தனித்தனியாக இருப்பதை பார்க்கும் பொழுது கஷ்டமாகத்தான் இருக்கிறது. பார்க்கிற நமக்கு அப்படி இருக்குது என்றால் மூர்த்திக்கு ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கும் . அதனால் தான் விரக்தியில் கதிரிடம் அதிக கோபத்தை காட்டி வருகிறார்.

Also read: ஏமாற போறாங்க, அதனால் ஓவர் பில்டப்.. குணசேகரின் நக்கல் நையாண்டி பேச்சு

பின்பு இவரை இப்படியே விட்டால் சரி ஆகாது என்று நினைத்து தனமும் கதிரும் முடிவு எடுக்கிறார்கள். இந்த குடும்பத்தை மறுபடியும் ஒட்ட வைப்பதற்காக தனம் ஜனார்த்தன் வீட்டிற்கு போகிறார். அங்கே ஜீவாவை பார்த்து நீ இல்லாமல் நாங்க எல்லாரும் எப்படி சந்தோஷமாக இருப்போம் எங்க கூட தயவுசெய்து வந்திரு என்று கெஞ்சுகிறார். இனிமேல் இந்த மாதிரி எந்த பிரச்சினையும் உனக்கு வராதபடி நம்ம பேசி முடிவு பண்ணிடலாம் என்று கூப்பிடுகிறார்.

ஆனாலும் ஜீவா இதை அமைதியாக கேட்டுவிட்டு வர மறுத்து விடுகிறார். இதை பார்த்துக் கொண்டிருக்கும் ஜனார்த்தன் மனதிற்குள் ரொம்பவும் சந்தோஷப்படுகிறார். இதற்கு மீனாவும் என்ன செய்வது என்று தெரியாமல் இவருடைய அப்பாவை பேச்சைக் கேட்டு அமைதியாக நிற்கிறார். இதற்கிடையில் தனம் நான் போய் கூப்பிட்டால் ஜீவா கண்டிப்பா வந்துருவான் என்ற நம்பிக்கையில் போனார் கடைசியில் பெரிய அவமானம் தான் கிடைத்திருக்கிறது.

Also read: ரஞ்சித்தை பார்த்து காண்டாகிய கோபி.. மனதிற்குள்ளே புலம்பித் தவித்த நிலைமை

அடுத்ததாக கதிர், கண்ணன் வீட்டுக்கு போய் கூப்பிடலாம் என்று கிளம்பி போகிறார். அங்கே கண்ணனிடம் பேசும் போது எல்லாம் சரியாயிடும் குடும்பம் தனித்தனியாக இருந்தால் நன்றாக இருக்காது நீ ஏண்டா இப்படி இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா எல்லாரும் முன்னாடியும் மண்டபத்தில் மூர்த்தி மாமா இவரை அடிச்சது சரியா என்று கேட்கிறாள். அது எங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானமாக இருந்தது அதை பற்றி நீங்க யாருமே பேசவில்லையே என்று சொல்கிறாள்.

அதற்கு கதிர் நடந்ததை பற்றி எதுவுமே பேச வேண்டாம் நான் வேணா அண்ணனை வர சொல்றேன். அவர் வந்து கூப்பிட்டால் நீங்கள் வருவீர்களா என்று கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா, மூர்த்தி மாமா வந்து கூப்பிட்டாலும் நாங்கள் வருகிற ஐடியா இல்லை என்று கொஞ்சம் திமிராக பேசுகிறாள். ஆனால் இதையும் பார்த்துட்டு கண்ணன் அமைதியாகத் தான் இருக்கிறான். மறுபடியும் இந்த குடும்பம் ஒன்று சேருமா அல்லது அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வரும் அடுத்த சிவகார்த்திகேயன்? முதல் படமே 3 பாகமாம்!

Trending News