ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

விடாமுயற்சி இந்த ஹாலிவுட் படத்தின் தழுவல் தான் என உறுதி.. அப்டீனா அஜித் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது!

பிரேக் டவுன் என்ற படத்தின் தழுவல்தான் விடாமுயற்சி என்று கூறப்படும் நிலையில், இப்படத்தின் இவ்விரு படங்களின் கதையப் பார்க்கலாம். ஜொனாதன் மோஸ்டோ இயக்கத்தில், கர்ட் ரஸ்ஸன், ஜேடி, வால்ஸ், ஜேத்லீன் குயின்லன் உள்ளிட்டோர் நடிப்பில், பாசில் போலடோரிஸ் இசையில், டினோ டி லாரன்டிஸ், மார்தா டி லாரன்டி தயாரிப்பில், கடந்த 1997 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான படம்தான் பிரேக் டவுன். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

பிரேக் டவுன் பட கதை: ஜெஃப் தனது மனைவி ஏமியுடன் மாசசூட்ஸ் நகரில் இருந்து, சான்டியாகோ பகுதிக்குச் செல்லும்போது, நடுவழியில் அவர்கள் சென்ற கார் திடீரென்று பழுதடைந்தது. அப்போது, ஒரு டிரக் ஓட்டுநர் அவர்களிடம் ஏமியை அருகில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று உதவுவதாக கூறிய நிலையில், கடத்திச் செல்கிறார்.

அந்த ஜீப்பின் பேட்டரியை யாரோ துண்டித்துவிட்டதை ஜெஃப் கண்டுபிடிக்கிறார். பின்னர், ஓட்டலுக்குச் சென்று டிரக் டிரைவருடன் தன் மனைவி வந்ததாக கூறும்போது, யாரும் பார்க்கவில்லை என்கிறார்கள். வழியில், ஜெஃப் அந்த டிரக் டிரைவரை பார்த்து, தன் மனைவியைப் பற்றி கேட்க, அவரோ ஏமியை பார்த்ததில்லை என்கிறார். இறுதியில் தன் மனைவி ஏமியை கடத்தியவர்களிடம் இருந்து மீட்டு மனைவியுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதுதான் கதை.

சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் அமைந்த இப்படத்தை இன்றும் பார்க்கும் ரசிகர்கள் உள்ளனர். இப்படத்தைப் போன்று தான் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற தகவல் வெளியாகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகாவின் பிரமாண்ட தயாரிப்பில், அஜித்குமார், திரிஷா, ஆரவ் ஆகியோர் நடிப்பில், அனிருத் இசையில், ஓம் பிரகாஷ், நிரவ் ஷா ஆகியோர் ஒளிப்பதிவில் உருவாகிவரும் படம் விடாமுயற்சி.

விடாமுயற்சி பட கதை : அஜித் தன் மனைவி திரிஷாவுடன் வெளிநாடான அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்கிறார். அப்போது, ஒரு கும்பல் திரிஷாவை கடத்துகிறது. அஜித் தன் புத்திசாலித்தனம் மற்றும் விடாமுயற்சியால் மனைவியை மீட்டாரா? இல்லையா? என்பதுதான் கதை.

பிரேக் டவுன் என்ற சூப்பர் ஹிட் படத்தின் தழுவல்தான் விடாமுயற்சி என்றாலும் இப்படத்தின் கதையை மெருகேற்றி, சிறப்பான முறையில் ஹாலிவுட் லெவலுக்கு மகிழ்திருமேனி திரைக்கதை அமைத்து, சஸ்பென்ஸ், திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹாலிவுட் சினிமா பிரியரான அஜித்குமார், இப்படத்தில் இம்ப்ரஸாகி அவரே கூட மகிழ்திருமேனியிடம் இப்படத்தின் நாட்டை வைத்து, தமிழுக்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைக்கும்படி கூறியிருக்கலாம் என தகவல் வெளியாகிறது.

எனவே விடாமுயற்சி படம் எந்த வகையில் ஏமாற்றத்தை ஏற்படுத்தாது. இரண்டு ஆண்டுகள் தயாரிப்பில் இருப்பதால் பக்காவாக ரசிகர்களின் எண்டர்டெயின்மென்டுக்கு குறையிருக்காத வகையில் படக்குழு கொடுக்க திட்டமிட்டுள்ளதால், இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என தெரிகிறது. படத்தின் கதை எப்படியிருந்தாலும், அஜித்தை ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டாட தல ரசிகர்கள் காத்துக் கிடப்பதை சொல்ல வேண்டுமா??

- Advertisement -spot_img

Trending News