ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஹீரோன்னு ஒத்துக்க முடியாத 5 கதாநாயகன்கள்.. செல்வாக்கை முழுமையாக பயன்படுத்திய உதயநிதி

Without influence, 5 heroes would not have become actors: குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஐந்து ஹீரோக்களிடம் செல்வாக்கு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் சினிமாவில் நடிக்க வந்திருக்க மாட்டார்கள். எவ்வளவோ திறமைசாலிகள் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கும் போது, ஒரு சில நடிகர்கள் வாரிசு நடிகர்களாகவும், செல்வாக்கு மிகுந்த குடும்பத்திலிருந்து வந்தவர்களாகவும் சுலபமாகவே திரையுலகில் நுழைந்து விடுகின்றனர். அதிலும் அரசியலிலும் சினிமாவிலும் ஆதிக்கம் படைத்த குடும்பத்திலிருந்து வந்த காரணத்திற்காகவே உதயநிதி தமிழ் சினிமாவில் ரொமான்டிக் ஹீரோவாகவும், மாஸ் ஹீரோவாகவும் வலம் வர முடிந்தது.

விஷால்: பிரபல தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டியின் மகன் தான் நடிகர் விஷால். இவர் ஒரு தெலுங்குக்காரராக இருந்தாலும் தமிழ் படங்களில் நடித்த பிறகுதான் பிரபலமானார். நடிகராகுவதற்கு முன் விஷால் அர்ஜுனின் வேதம், ஏழுமலை படங்களில் உதவி இயக்குனராகவும் பணி புரிந்திருக்கிறார். அப்பாவுடைய செல்வாக்கை பயன்படுத்தி தொடர்ந்து பட வாய்ப்பு பெற்ற விஷால், இப்போது தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் பதவி வகிக்கிறார். 

விக்ரம் பிரபு: செவாலியர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, என்னதான் தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஒரு சில படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னமும் அவரால் எதிர்பார்த்த அளவு வெற்றி படங்களை கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் தாத்தா, அப்பா சேர்த்து வைத்த நல்ல பெயரை வைத்துக்கொண்டு டாப் ஹீரோ ஆகுவதற்கு முட்டி மோதுகிறார். 

Also Read: கலைஞர், கேப்டன் ஆன்மா சும்மாவே விடாது.. கிழிந்த விஷாலின் முகமூடி

செல்வாக்கு இல்லாம இருந்திருந்தால், 5 ஹீரோக்களால் நடிகராகிருக்க முடியாது

கௌதம் கார்த்திக்: நவரச நாயகன் நடிகர் கார்த்திக் அவர்களின் மகனாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர்தான் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் டாப் இயக்குனரான மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தின் மூலம் அறிமுகமாகி, இதுவரை சொல்லும்படியான ஒரு வெற்றிப்படத்தை கூட தரவில்லை. என்னதான் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு ஒரு சரியான கதைகளும் அமையவில்லை. கௌதம் கார்த்தியின் தந்தை கார்த்திக், 90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர். அவர் அளவிற்கு அவரது மகனான கௌதம் கார்த்திக் வெற்றி நடை போடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடப்பதற்கான எந்த சாத்திய கூறும் தென்படலை.

ஜித்தன் ரமேஷ்: பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரியின் மகனும் நடிகர் ஜீவாவின் அண்ணனும் தான் நடிகர் ஜித்தன் ரமேஷ். இவர் ஜித்தன் படத்தின் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். ஆனால் இவரால் அவருடைய தம்பி ஜீவா அளவுக்கு கூட வளர முடியவில்லை. இவர் சினிமாவில் நுழைந்த போதே ‘ஹீரோ மெட்டீரியலே இல்லை’ என்று ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். ஆனால் தயாரிப்பாளரின் மகன் என்ற போர்வையில் படம் ஓடுதோ இல்லையோ ஆனா, தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். இப்போதுதான் அடிபட்டு ஒருவழியா சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி விட்டார்.

உதயநிதி ஸ்டாலின்: இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக கட்சியின் அமைச்சராக இருக்கும் உதயநிதி, போன வருடம் வரை சினிமாவில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்தார். சுட்டு போட்டாலும் நடிப்பே வராத உதயநிதியை ரோமன்ஸ் படங்களில் நடிக்க வச்சது, பாக்குற நமக்கு தான் பெரிய தண்டனையாக இருந்தது. திறமையான நடிகர்களால் ஒன்று இரண்டு படம் நடிக்கவே நாக்கு தள்ளுது. ஆனால் இவர் அசால்டா 17 படங்கள் நடித்து முடித்துவிட்டு, இப்போது முழு அரசியல்வாதியாக மாறிவிட்டார். இவர் மட்டும் செல்வாக்கு மிகுந்த குடும்பத்திலிருந்து வராமல் இருந்திருந்தால் நிச்சயம் சினிமாவில் ஹீரோவாகி இருக்க வாய்ப்பே இல்லை.

Also Read: இந்த ஜென்மத்துல விஷாலுக்கு கல்யாணமே ஆகாது.. எதுக்குமே லாயக்கில்லை பைல்வானின் சாபம்

Trending News