திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிக் பாஸ் விக்ரமின் முகத்திரையை கிழித்த வழக்கறிஞர்.. திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய கொடூரம்.!

விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான பிக் பாஸ் கடந்த ஆறு சீசன்களாக வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவர் மக்களுக்கு ரொம்பவும் நெருக்கமானவராக மாறிவிடுவார். நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து நடிகை ஓவியா, ஆரி போன்றவர்கள் மக்களின் பேராதரவை பெற்றார்கள் .

அப்படி கடந்த சீசனில் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் விக்ரமன். தன்னுடைய பேச்சுக்களாலும், கருத்துகளாலும் மக்கள் மனதில் இடம்பெற்றார். மேலும் பெண்ணுரிமை பற்றி ரொம்பவும் நல்ல கருத்துக்களை அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். மேலும் விக்ரமன் குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவரும் ஆவார்.

Also Read:பிக்பாஸ் பிரபலத்திற்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்.. மீண்டும் பத்த வச்ச வத்திக்குச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அதில் கலந்து கொண்ட அசீம் மற்றும் விக்ரமன் ரசிகர்களுக்கு இடையே அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மோதல்கள் ஏற்பட்டு வந்தது. இருவரும் தனிப்பட்ட முறையில் தங்களுடைய கருத்துக்களை பேட்டிகளிலும் தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் தற்போது விக்ரமன் மீது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை பெண் வழக்கறிஞர் ஒருவர் வைத்திருக்கிறார்.

கிருபா முனுசாமி என்னும் வழக்கறிஞர் பிக் பாஸ் விக்ரமன் தன்னை காதலிப்பது போல ஏமாற்றி, மனைவி போல் தன்னிடம் நடந்து கொண்டதாகவும், தன்னுடைய பணம் அத்தனையையும் செலவு செய்து விட்டதாகவும், தற்போது தன்னை ஏமாற்றி வருவதாகவும் சொல்லி இருக்கிறார். மேலும் அவரிடம் இது பற்றி கேட்டபோது ரொம்பவும் கீழ்தரமாக பேசி, ஜாதியை சொல்லி அசிங்கப்படுத்துவதாகவும் சொல்லி இருக்கிறார்.

Also Read:பிக் பாஸ் காதலால் சினிமா கேரியரே போச்சு.. நொந்து போய் பேசிய விஜய் சேதுபதி பட பொண்டாட்டி

இந்தப் பெண் சார்ந்த ஜாதி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை பற்றியும், அந்தக் கட்சியில் உள்ள அனைத்து ஆண்களின் சகோதரிகள் மற்றும் தாய்மார்களை கூட வன்புணர்வு செய்வேன், நீயே ஸ்காலர்ஷிப் வாங்கி ஓசி சோறு சாப்பிட்டு கொண்டிருக்கிறாய், என்றெல்லாம் பேசி தன்னை கஷ்டப்படுத்துவதாகவும், விடுதலை சிறுத்தை கட்சி விக்ரமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.

விக்ரமன் ஊடகங்களுக்கு மட்டுமே சமூக கருத்துக்களை சொல்லும் அரசியல்வாதியாக தன்னைக் காட்டிக் கொள்கிறார், உண்மையில் அவர் அப்படி இல்லை என்று சொல்லி இருக்கும் கிருபா, விரைவில் விக்ரமன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நல்ல பெயரை சம்பாதித்த இவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Also Read:வாயை கொடுத்து வம்படியாக மாட்டிக்கொண்ட அம்மணி அபிராமி.. எங்க போச்சு உங்க ‘நோ மீன்ஸ் நோ’!

Trending News