ஜெயிலர் படத்தின் மூலம் நெல்சனை ரஜினி தூக்கிவிட்ட மாதிரி கூலி படத்திலும் லோகேஷை ரஜினி தூக்கிவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் மூலம் லியோ படத்தில் விட்ட நம்பிக்கையை அவர் கூலி படத்தில் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனுக்கு அப்படம் பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இப்படத்தை ஓவர் பில்டப் செய்து ஹைப் ஏற்றியதால் ஓடவில்லை. இப்படத்தை பலரும் ட்ரோல் செய்தனர். இப்படத்தின் வசூல், பாக்ஸ் ஆபிஸ் இதெல்லாம் கூறினாலும் எந்த வகையில் அது ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இந்த நிலையில், அடுத்த படத்தை ஹிட் படமாக கொடுக்க வேண்டுமென நெல்சன் இருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியை அணுகி கதையைக் கூறினார்.
சூப்பர் ஹிட்டான ஜெயிலர்
அவரும் பீஸ்ட் தோல்விப் படம் என்று இருந்துவிடாமல் டாக்டர் போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த திறமையான இயக்குனர் என்ற அடிப்படையில் ஒப்புக் கொண்ட நடித்த படம்தான் ஜெயிலர். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.ஜெயிலர் படம் நெல்சனுக்கு மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினி கேரியரிலும் பெரிய ஹிட் மற்றும் விக்ரம், பொன்னியின் செல்வன் 1 ஆகிய படங்களின் வசூலை முறியடித்து நம்பர் 1 ஆக உள்ளது.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து இயக்கிய லியோ படமும் கடந்தாண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தின் வசூல் பற்றி பலவிதமான கூறினாலும் இப்படத்தில் லோகேஷ் சொதப்பியதை அவரது ரசிகர்களே விமர்சித்தனர்.
இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் மூலம் நெல்சனுக்கு ஒரு ஹிட் படத்தைக் கொடுத்த ரஜினிகாந்த், அடுத்து, லியோவில் இழந்த நம்பிக்கையை இப்படம் மூலம் மீட்டுக் கொடுப்பார் என்று பேசப்படுகிறது.
விஜய்க்குப் போட்டியாளராக ரஜினி
இன்றும் விஜய்க்குப் போட்டியாளராக ரஜினிதான் என்று ஒரு விழாவில் கலாநிதி மாறன் கூறிய நிலையில், கூலி படத்தையும் ஜெயிலர் படத்தைப் போன்று ஹிட்டாக்கவும் அக்கூட்டணி முயற்சித்து வருகிறது. எனவே நிச்சயம் லோகேஷ் கனகராஜின் கேரியரில் அடுத்தகட்டத்திற்கு செல்ல நெல்சனை தூக்கிவிட்ட மாதிரி லோகேஷையும் தூக்கிவிடுவார் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
பொதுவாகவே விஜயின் படங்களான வாரிசு, லியோ, மாஸ்டர், தி கோட் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிசில் ரூ.1000 கோடி ரூ.500 கோடி வசூல் குவிக்கும் என்று பதிவுகள் போட்டாலும் அதன் உண்மைத்தன்மை தயாரிப்பாளருக்கும், சினிமா விமர்சகர்களுக்கு மட்டுமே தெரியும்!
ஆனால், எல்லோரும் அறிந்த ஜெயிலர் படம் ஹிட் லிஸ்ட் என்பதால் அதே பாணியில் லோகேஷின் கூலி படத்தையும் வெளியிட ரஜினி கூறியிருக்கலாம் என தெரிகிறது.