வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பல கோடியை அள்ளிய அருண் விஜய், ஹரி கூட்டணி.. யானை படத்தின் மொத்த வசூல் விவரம்

ஹரி இயக்கத்தில் சமீபத்தில் யானை திரைப்படம் வெளியானது. அருண் விஜய், யோகி பாபு, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல தடைகளை தாண்டி வெளியான இந்த திரைப்படம் தற்போது வசூலிலும் நல்ல லாபம் பார்த்துள்ளது.

அந்த வகையில் அருண் விஜய்க்கு நீண்ட காலம் கழித்து இப்படி ஒரு வெற்றி திரைப்படம் அமைந்துள்ளது. சமீப காலமாக அவரின் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரிய அளவில் லாபம் பெறவில்லை.

இதனால் அருண் விஜய் எப்படியாவது ஒரு வெற்றி திரைப்படம் கொடுத்தே ஆக வேண்டும் என்று ஹரியுடன் கூட்டணி அமைத்தார். அவர் எதிர்பார்த்தது போலவே இந்த கூட்டணி தற்போது ஒரு வெற்றி கூட்டணியாக மாறி இருக்கிறது. யானை திரைப்படம் வெளிவந்து இரண்டு வாரங்களுக்கு மேல் கடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில் படம் வெளிவந்த இந்த 17 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 18 கோடி லாபம் பார்த்துள்ளது. அது மட்டுமல்லாமல் சென்னையில் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு இருந்து வருகிறது. அந்த வகையில் இப்படம் சென்னையில் மட்டும் 1.36 கோடி வசூல் பெற்றுள்ளது.

இதனால் தற்போது அருண் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். பொதுவாகவே ஹரியின் திரைப்படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸின் ஆதரவு அதிகமாக இருக்கும். அது இந்த படத்திற்கும் எக்க சக்கமாக கிடைத்துள்ளது.

இந்த வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் கிடப்பில் போடப்பட்ட படங்கள் அனைத்தும் தற்போது தூசி தட்டப்பட்டு வருகிறது. அந்தப் படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News